சூர்யா பத்தி தப்பா பேசலாமா விளங்காதப்பயலே.. அழுகிப்போன தர்பூசணி.. திவாகரை விளாசிய ஜி.பி. முத்து!
சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கஜினி படத்தில் சூர்யா நடித்து அசத்திய வாட்டர்மெலான் சீனை சமீபத்தில் ரீ - க்ரிய்யேட் செய்து வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் என தனக்குத் தானே பட்டம் வைத்துக் கொண்டு சோஷியல் மீடியாவில் காமெடி வீடியோக்களை வெளியிட்டு வந்த திவாகர், சமீபத்தில் வெளியான கருப்பு பட டீசரில் சூர்யா மீண்டும் அதை ரீ - க்ரியேட் செய்த நிலையில், சூர்யாவே என்னை பார்த்து காப்பியடித்து விட்டார் என கேவலமாக பேசியது ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
கலாட்டா யூடியூப் சேனலில் பேட்டியெடுக்கும் போது, தொகுப்பாளர் வாட்டர்மெலான் ஸ்டார் என உன்னை கொஞ்சணுமா? கேள்விக் கேட்டா மைக்கை கழட்டி வச்சிட்டு கிளம்பிடுவியா என வெளுத்து வாங்கியதும் வைரலானது.

இந்நிலையில், பிக் பாஸ் பிரபலமும் டிக்டாக், இன்ஸ்டாகிராம் என சோஷியல் மீடியா மூலம் பிரபலமான ஜி.பி. முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யா சார் பற்றி தப்பா பேசு நீ யாருடா பன்னிப்பயலே என வீடியோ முழுவதும் திவாகரை பொளந்துக் கட்டியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
நடிப்பு அரக்கனா நீ: தன்னைத் தானே நடிப்பு அரக்கன் என திவாகர் கூறிக்கொண்டு வரும் நிலையில், அவரை ஒரு சில படங்களிலும் சினிமா இயக்குநர்கள் காமெடி காட்சிகளுக்காக நடிக்க வைத்து வருகின்றனர். ஏற்கனவே பயில்வான் ரங்கநாதனே ஒருமுறை திவாகரை அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டார். இந்நிலையில், தொடர்ந்து அனைத்து இடங்களிலும் தனது வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் அடி வாங்கி வருகிறார் திவாகர் என்கின்றனர்.
சூர்யா சார் பத்தி தப்பா பேசலாமா?: தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான சிவகுமாரின் வாரிசான சூர்யா அகரம் அறக்கட்டளை மூலமாக எத்தனையோ மாணவர்களுக்கு கல்விச் செல்வத்தை கொடுத்து பெரிய பெரிய ஆளாக மாற்றி வருகிறார். நல்ல நல்ல படங்களை பல வருடங்களாக கொடுத்து தனக்கென தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார். அவரைப் போய் கேவலமாக பேசலாமா விளங்காதப்பயலே என்றும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி ஜி.பி. முத்து வெளியிட்ட வீடியோவை சூர்யா ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











