Lakshmi stores serial: ப்பூ தாத்தாவின் கோவம் இம்புட்டுதானா?

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பீச்சில் ரவுடி பசங்க சாரி நல்ல பசங்க தொல்லையால் ரவி, பாக்கிய லட்சுமிக்கு தாலி கட்டிடறான்.

இதை வீட்டில் சொன்னால் கமலா கல்யாணத்துக்கு எதுவும் தடையா இருந்துட போகுதுன்னு இப்போ சொல்ல வேணாம்னு பாக்கிய லட்சுமி சொல்லிடறா. தாத்தாவுக்கு சத்தியம் செய்து குடுத்ததனால தன் காதலை மறைச்சதையும் ஒப்புக்கறா.

தாலியை மறைச்சு வச்சுக்கோ பஞ்சு..நேரம் வரும்போது வீட்டுக்கு சொல்லிடலாம்னு ரவி சொல்லித் தர்றான்.

பாக்கியலட்சுமி அண்ணன்

பாக்கியலட்சுமி அண்ணன்

வீட்டுக்கு வந்ததும் பாக்கிய லட்சுமியின் அண்ணி இந்த நேரத்துல வயசு பையனோட வந்திருக்கே... குடும்பமா இதுன்னு கத்தறாங்க.என் தங்கச்சி ஒருத்தனோட ஓடிப்போயிட்டா.. இவளைப் பாருங்க ஒரு நாளைக்கு திருட்டு தாலி கட்டிக்கிட்டு வரப்போறான்னு திட்டிட்டு போயிடறாங்க. அண்ணனும் தாத்தாவும் பாக்கிய லட்சுமிக்கு சமாதானம் சொல்றாங்க.

தாத்தா பாக்கியலட்சுமி

தாத்தா பாக்கியலட்சுமி

தாத்தா தனியாக அறையில் இருந்த நேரம்பார்த்து பாக்கியலட்சுமி நடந்ததைச் சொல்றா. அதிர்ச்சியான தாத்தா..சீ உன்னைப் போயி நம்பினேன் பாருன்னு சொல்லிட்டு, தாலியை கழட்டி தூரப்போட வேண்டியதுதானேன்னு சொல்லிட்டு போயிடறார். பிறகு வந்து ரவிகிட்ட நான் பேசணும்னு சொல்றார்.சரி தாத்தான்னு சொல்லி ரவியைக் கோயிலுக்கு வரவைக்கறா பாக்கியலட்சுமி.

எங்கே போச்சு

எங்கே போச்சு

கோயிலில் தாத்தா ரவிகிட்ட பேசறார். உங்களை எனக்கு பிடிக்கும் தம்பி... நீ ரொம்ப நல்லா வளர்க்கப்பட்ட புள்ள.. கல்யாணம் உங்க கையை மீறி நடந்து போச்சு.இல்லாட்டி அந்த ரவுடி பய என் பேத்தி கழுத்துல தாலி கட்டி இருப்பானேன்னு புலம்பறார். நீங்க வீட்டில் இதைப் பத்தி சொல்லாம இருப்பது தப்பு தம்பி.மகாலட்சுமி அம்மாகிட்ட உண்மையை சொல்லுங்க. இது என் பேத்தி வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். நல்லது நடக்கற வரைக்கும் எனக்குத் தூக்கம் வராதுன்னு கோவமே இல்லாம சமாதானமா பேசறார்.

அர்ச்சனை கோயிலில்

அர்ச்சனை கோயிலில்

கோயிலில் அர்ச்சனை பண்றாங்க.ரவி பேர் நட்சத்திரத்தை பாக்கிய லட்சுமி சொல்ல, பாக்கிய லட்சுமி பேர் நட்சத்திரத்தை ரவி சொல்ல, கோயிலில் சின்ன ரொமான்ஸ்.பார்த்து ரசிக்கிறார் தாத்தா. அது மட்டுமா,அர்ச்சகர் குங்குமம் தர,அதை மறைச்சு வச்சிருக்கும் தாலியை எடுத்து அதில் வச்சுக்கறா. எல்லாம் பதி பக்திதான்.. சீரியலை பார்க்கறவங்களுக்குத்தான் கோயிலுக்கு வந்திருக்கும் ரவியின் அண்ணி உமா பார்த்துருவாங்களோன்னு பக்கு பக்குன்னு இருக்குது. கடைசியா பாக்கிய லட்சுமி,அவ தாத்தா,அவ தங்கச்சி பேசிகிட்டு இருக்கறதை உமா அண்ணி பார்த்துட்டு நிக்கறாங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X