யாஷிகாவுக்கு மகத் மீது காதல் வர யார் காரணம் தெரியுமா?

By Siva

Recommended Video

யாஷிகாவுக்கு மகத் மீது காதல் வர காரணம் இவர்தான்

சென்னை: மகத் மீது காதல் வர யார் காரணம் என்று தெரிவித்துள்ளார் யாஷிகா.

ஏற்கனவே ஒருவரை காதலிக்கும் யாஷிகா பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்த இடத்தில் சக போட்டியாளரான மகத் மீது காதலில் விழுந்தார். மகத் பிராச்சியை காதலிப்பது தெரிந்தும் தனது காதலை வெளிப்படுத்தினார் யாஷிகா.

இந்நிலையில் மகத் மீது காதல் வர யார் காரணம் என்று ஐஸ்வர்யாவிடம் தெரிவித்துள்ளார் யாஷிகா.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

யாஷிகா மகத்தை பற்றி ஐஸ்வர்யாவிடம் பேசினார். முதல் நாள் மகத் என் அருகில் வந்து உட்கார்ந்தான். என்னை ஏற்கனவே தெரியும் என்றான். ஆனால் அவன் யார் என்று எனக்கு தெரியாது. அவன் அறைக்கு சென்று ஷூ வை எடுத்து படுக்கையின் மீது வைத்து இது என் படுக்கை என்பது போன்று நடந்து கொண்டான். அதை பார்த்த எனக்கு இவன் என்னை போன்றே இருக்கானே என்று தோன்றியது. நான் கம்மலை கழற்றி படுக்கையின் மீது வைத்து இடம் பிடித்தேன் என்று யாஷிகா தெரிவித்துள்ளார்.

மகத்

மகத்

நான் மொக்கை ஜோக் சொல்லத் துவங்கினேன். அவன் அதை கேட்டு சிரித்தான். இந்த வீட்டில் ஒருத்தன் என் ஜோக்கையும் கேட்டு சிரிக்கிறானே என்று தோன்றியது. மகத் ரொம்ப க்யூட். இந்த வீட்டில் ரொம்ப அழகான முகம் அவனுக்குத் தான். பிக் பாஸ் வீட்டில் யார் அழகு என்று பிக் பாஸ் கேட்டதற்கு என் பெயரை சொன்னான் மகத். அப்பொழுது தான் ஒரு கனெக்ஷன் ஏற்பட்டது என்கிறார் யாஷிகா.

பிக் பாஸ்

பிக் பாஸ்

உன்னால் யாரையாவது உன் மீது காதலில் விழ வைக்க முடியுமா என்று பிக் பாஸ் கேட்டார். மகத்துக்கு காதலி இருக்கிறார், ஷாரிக் சகோதரர் போன்று, மற்றவர்கள் திருமணமானவர்கள் அதனால் காதலை திணிக்க முடியாது, அதுவாக ஏற்பட வேண்டும் என்று பதில் அளித்தேன் என்று யாஷிகா ஐஸ்வர்யாவிடம் கூறினார். ஐஸும் சிரித்துக் கொண்டே யாஷிகா கூறியதை கேட்டார்.

எஜமான்

எஜமான்

எஜமான் டாஸ்கின்போது அவன் கூடவே இருந்தேன். சாப்பாடு ஊட்டிவிட்டேன், ஜட்டியை அயர்ன் செய்தேன், பாத்ரூமில் ஷாம்பூ போட்டுவிட்டேன். அப்பொழுது தான் லவ் ட்ரிக்கர் ஆகத் துவங்கியது. அந்த டாஸ்கின் போது ஏதோ ஒரு விஷயம் நடந்தது என்றார் யாஷிகா. எஜமான் டாஸ்கின்போது மகத் யாஷிகாவை என்ன பாடு படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரியுமே. ஆக, யாஷிகாவுக்கு மகத் மீது காதல் வர பிக் பாஸ் தான் காரணம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X