பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஜோக்கர் யார் தெரியுமோ?
சென்னை: பிக் பாஸ் 2 வீட்டிற்குள் வந்த ஜோக்கர் யார் என்று தெரிந்துவிட்டதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி பிடிக்காவிட்டாலும் அதை பார்த்துவிட்டு ட்விட்டரில் கருத்து தெரிவிப்பவர்கள் பலர். அன்றாடம் பிக் பாஸ் வீட்டில் நடப்பவை குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
அப்படி வந்த விமர்சனங்களில் சில இதோ உங்கள் பார்வைக்காக.
அம்மா
எனக்கு ஐஸ்வர்யா மீது நல்ல அபிப்ராயம் இல்லை. ரித்து பிரபலமாக உள்ளதாக ஐஸ்வர்யாவின் அம்மா கூறினார். ஆனால் உன் அம்மா என்ன சொன்னார் என்று பாலாஜி கேட்டதற்கு அனைவரும் பிரபலமாக உள்ளதாக கூறினார் என்று பொய் சொன்னார் ஐஸ்வர்யா. ரித்து பற்றி அவரின் அம்மா கூறியதை தெரிவிக்க அவருக்கு மனம் இல்லை.
காதல்
மகத்தை பிரிந்த சோகத்தில் இருக்கிறார் யாஷிகா என்பதை நம்ப முடியவில்லை.
ஜோக்கர்
நேற்று முன்தினம் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு ஜோக்கர் வந்தார். அந்த ஜோக்கர் பிக் பாஸ் தான் என்று ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.
காதலி
டேனி காதலியின் ஓவர் மேக்கப், ஓவர் ஆக்டிங்கை பார்க்க காமெடியாக இருந்தது. டேனி அம்மாவை கண்டுக்கவில்லை. கடந்த ஆண்டு நடந்த கணேஷ், நிஷா சந்திப்பு ரொம்ப டீசன்டாக இருந்தது.
கண்ணீர்
ஐஸ்வர்யா அம்மாவின் கண்ணீர் போலியாக தெரிகிறது. மகளை ஏடிஎம் எந்திரமாக பயன்படுத்தும் ஒரு அம்மா தன் மகளின் வெற்றிக்காக அனைவரிடமும் நன்றாக நடந்து கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications