»   »  பிக் பாஸ் வீட்டில் 'மிக்சர்' யார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் 'மிக்சர்' யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் என்ன ரணகளம் நடந்தாலும் மிக்சர் மாமா மாதிரி அமைதியாக இருப்பவர் யார் என்று தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்ப்பதற்காக அதை பார்க்கத் துவங்கியவர்கள் தற்போது அதை பார்க்காமல் இருக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டனர்.

பிக் பாஸ் வீட்டில் கோபம் வருகிற மாதிரி பேசும் கேரக்டர்கள், எதுவும் பேசாமல் இருக்கும் கேரக்டர்கள் உள்ளன.

ரைசா

பிக் பாஸ் வீட்டில் எந்த ரணகளம் நடந்தாலும் சரி எனக்கென்ன வந்தது என்று இருக்கிறார் ரைசா. அவர் தான் பிக் பாஸ் வீட்டின் மிக்சர் கதாபாத்திரம்.

பேச்சு

பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்தே ரைசா அதிகம் பேசியது இல்லை. ஆமாம், யெஸ், சரி என்று அடக்கி வாசிக்கிறார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்துவிட்டு போவோம் என்று உள்ளார் போல.

மேக்கப்

பிக் பாஸ் வீட்டில் சண்டை நடந்தாலும், சமாதானம் நடந்தாலும் சரி ரைசா மேக்கப்பும் கையுமாக இருக்கிறார். அவ்வப்போது அவர் ஃபேஸ்பேக் போடுவதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போடுகிறார்கள்.

கேர்ள்ஸ்

மிச்சர் பாய்ஸிக்கு அப்புறம், மேக்கப் கேர்ள்ஸ்.. என்ன பிரச்சனை நடந்தாலும் #raiza பெயிண்ட்ட கைல எடுத்துருது..

English summary
Raiza Wilson is the 'mixture party' in the Big Boss house. Whatever happens in the house, she won't say more than two words.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil