கல்யாணத்திற்கு முகூர்த்த புடவை -வேட்டி சட்டை ரஜினிதான் கொடுத்தார்.. பெருமையுடன் சொன்ன ஆர்த்தி -கணேஷ்கர்!

சென்னை : சின்னத்திரை -பெரியத்திரை என்று மாறி மாறி நடித்து வருகின்றனர் நடிகை ஆர்த்தி மற்றும் நடிகர் கணேஷ். கணேஷ் தனது பெயரை கணேஷ்கர் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில் தற்போது விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் சீசன் 2வில் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது திருமண கலாட்டாக்களை சொல்லும் எபிசோடில் பங்கேற்றுள்ள இவர்கள் தங்களது திருமணம் எப்படி கலாட்டாவுடன் நடைபெற்றது என்பது குறித்து பகிர்ந்துள்ளனர்.

நடிகை ஆர்த்தி

நடிகை ஆர்த்தி

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளின்மூலம் பிரபலமானவர் நடிகை ஆர்த்தி. இதையடுத்து இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் ஆர்த்தி. இதன்மூலம் இவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

 கணேஷ்கரை மணந்த ஆர்த்தி

கணேஷ்கரை மணந்த ஆர்த்தி

இவரது உருவம் கேலிக்குள்ளாகி வந்தாலும், அதையே தன்னுடைய ப்ளஸ்ஸாக கொண்டு இவர் படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் உள்ளிட்டவர்களுடன் இவர் நடித்துள்ள படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தன. இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் கணேஷ்கரை இவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

 பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி

தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பங்கேற்று சிறப்பாக அனைவரையும் கவரும்வகையில் ஒவ்வொரு வாரமும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் திருமண கலாட்டா சுற்றில் ஒவ்வொரு ஜோடியும் தங்களது திருமண அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

கலாட்டாவாக நடந்த திருமணம்

கலாட்டாவாக நடந்த திருமணம்

அந்த வகையில் தங்களது திருமணம் எப்படி கலாட்டாவாக நடந்தது என்பதை தங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் இருவரும் பகிர்ந்துள்ளனர். அதில் தங்களது திருமணம் குருவாயூரில் நடைபெற்றதாகவும், அடுத்தடுத்த ஜோடிகள் அன்றைய தினம் காத்திருந்த நிலையில், இருவரும் மேடைக்கு பிடித்து தள்ளப்பட்டதாகவும், தங்களுடைய பெற்றோர் முதற்கொண்டு யாருமே இல்லாமல் தங்களது திருமணம் நடைபெற்றதாகவும் ஆர்த்தி குறிப்பிட்டார்.

 தாலியை தராத மற்றவர்கள்

தாலியை தராத மற்றவர்கள்

இதுகுறித்து பேசிய கணேஷ்கர், அங்கிருந்தவர் தன்னிடம் தாலியை கொடுக்கவே இல்லை என்றும், அவரிடமிருந்து பிடுங்கி தான் தாலியை கட்டியதாகவும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். தொடர்ந்து தன்னுடைய வாழ்நாளில் முக்கியமான அந்த நாள் தனக்கு திருப்தியை தரவில்லை என்றும் ஆர்த்தி தெரிவித்தார்.

சிறப்பாக நடந்த ரிஷப்ஷன்

சிறப்பாக நடந்த ரிஷப்ஷன்

ஆனால் தங்களது ரிஷப்ஷன் மிகவும் சிறப்பாக நடைபெற்றதாகவும் நடிகர் ரஜினிகாந்த், தங்களது முகூர்த்த சேலை -வேட்டி சட்டையை கொடுத்ததாகவும், கலைஞர் கருணாநிதி தங்களது திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தியதாகவும், தங்களின் முதல் கிப்ட் விஜய்காந்திடம் இருந்து வந்ததாகவும் ஆர்த்தி கூறினார்.

அடுத்தடுத்த சிறப்பான சம்பவங்கள்

அடுத்தடுத்த சிறப்பான சம்பவங்கள்

இதேபோல வெளிநாட்டில் இருந்த நடிகர் கமல்ஹாசன் தங்களுக்கு அங்கிருந்து கால் செய்து வாழ்த்தியதாகவும், தங்களின் முதல் விருந்து நடிகர் விஜய் வீட்டில், சங்கீதா கைகளால் பரிமாறப்பட்டதாகவும் ஆர்த்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். திருமணத்தில் விட்டதை ரிஷப்ஷனில் சரிகட்டியதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் நடுவர்கள் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X