பிக் பாஸ் வீட்டில் ஆர்த்தி: ஐஸ்வர்யாவை பார்த்து இப்படி சொல்லிட்டாரே
Recommended Video

சென்னை: முன்னாள் போட்டியாளர்களான ஆர்த்தி, சுஜா வருணி, காயத்ரி, சினேகன், வையாபுரி ஆகியோர் பிக் பாஸ் 2 வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து ஐஸ்வர்யாவுக்கு பதில் சென்றாயனை வெளியேற்றிய பிறகு பார்வைாயளர்கள் பலரும் கடுப்பில் உள்ளனர். இந்நிலையில் அவர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்துள்ளார் பிக் பாஸ்.
சும்மா ஐஸ்வர்யாவை நீலிக் கண்ணீர் விட வைத்து ப்ரொமோ வெளியிட்டால் வேலைக்கு ஆகாது என்பதை புரிந்து கொண்டுள்ளார்.
சினேகன்
முன்னாள் போட்டியாளர்களான ஆர்த்தி, சுஜா வருணி, காயத்ரி, சினேகன், வையாபுரி ஆகியோர் பிக் பாஸ் 2 வீட்டிற்கு சென்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. காயத்ரி மும்தாஜ், ஐஸ்வர்யாவை கட்டிப்பிடித்துள்ளார். வையாபுரி நேராக சென்று சிங்கிளாக அல்லாடும் தாடி பாலாஜியை கட்டிப்பிடித்தார். சினேகன் யாரை எல்லாம் கட்டிப்பிடிக்கப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்த்தி
பிக் பாஸை ட்விட்டரில் கிழி கிழின்னு கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார் ஆர்த்தி. ஐஸ்வர்யாவின் அம்மா வந்தபோது பிக் பாஸின் மாமியார் வந்துள்ளார் என்று கலாய்த்தார். மேலும் பிக் பாஸ், வீடு, டைட்டில் எல்லாமே ஐஸ்வர்யாவுக்கு தான் என்று பகிரங்கமாக ட்வீட்டினார். அப்படிப்பட்ட ஆர்த்தி பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளது வியப்பாக உள்ளது.

மருமகளே
ட்விட்டரில் மட்டும் அல்ல நேரிலும் ஐஸ்வர்யாவை கலாய்த்துள்ளார் ஆர்த்தி. பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவை பார்த்த அவர், தமிழ்நாட்டின் திருமகளே, பிக் பாஸ் வீட்டின் மருமகளே என்றார். வந்தவுடன் வேலையை ஆரம்பித்து விட்டார் ஆர்த்தி. பிக் பாஸ் போட்ட திட்டம் சரியாக வேலை செய்கிறது. கவனத்தை திசை திருப்பவே இந்த முயற்சி.
பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டிற்கு ஆர்த்தி வந்ததை பார்த்த வேகத்தில் மீம்ஸ் போட்டுவிட்டார்கள். நல்லா வருவீங்க பாஸ் நீங்க


Click it and Unblock the Notifications











