பிக் பாஸின் ரகசியத்தை பப்ளிக்காக போட்டுடைத்த ஆர்த்தி: அய்யோ, அய்யய்யோ...
Recommended Video

சென்னை: மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து பிக் பாஸ் பற்றிய உண்மையை சத்தமாக பேசிவிட்டார் நடிகை ஆர்த்தி.
பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யாவை வாரா வாரம் காப்பாற்ற படாதபாடு படுகிறார் பிக் பாஸ். பிக் பாஸ் ஐஸ்வர்யாவை காப்பாற்ற செய்வதை எல்லாம் வைத்து மீம்ஸ் போடுகிறார்கள்.
ஐஸ்வர்யாவின் அம்மா வந்தபோது அவரை பிக் பாஸின் மாமியார் என்று கிண்டல் செய்தார்கள் பார்வையாளர்கள்.

கலாய்
ஐஸ்வர்யாவின் அம்மாவை பிக் பாஸின் மாமியார் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். ஏகப்பட்ட மீம்ஸுகள் போடுவதுடன், கலாய்த்து ட்வீட்டி வருகிறார்கள். இந்நிலையில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ஆர்த்தி தில்லாக பிக் பாஸ் பற்றி ட்வீட் செய்து நெட்டிசன்களிடம் பாராட்டு பெற்றுள்ளார்.
பெங்காளி
பெங்காளி பேசலாமே, கமல் சாருக்கு தெரியுமே!! பொண்ணு சொன்ன கதையை அம்மாவுக்கு சொல்லி கொடுக்கலையோ?? பிக் பாஸ் மாமியார் பின்றாங்க என்று ட்வீட் செய்துள்ளார் ஆர்த்தி. இருந்தாலும் உங்களுக்கு ரொம்பத் தான் தைரியும் ஆர்த்தி. கீப் இட் அப்.
கணவர்
ஆர்த்தியின் ட்வீட்டை பார்த்த ஒருவரோ, ஐஸ்வர்யாவை காப்பாற்ற பெரு முயற்சி செய்யும் பிக் பாஸ் தான் இந்த உலகின் சிறந்த கணவர் என்று கிண்டல் செய்துள்ளார்.
பார்வையாளர்கள்
பார்வையாளர்கள் பிக் பாஸை எப்படி கிண்டல் செய்கிறார்களோ அதே மாதிரி கலாய்த்த ஆர்த்தியை பலரும் பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











