மகத், ஐஸ்வர்யா, யாஷிகாவின் கொட்டத்தை அடக்கிய கமல்: ஹாட்ஸ் ஆஃப்
Recommended Video

சென்னை: கமல் ஹாஸன் நேற்றைய நிகழ்ச்சியில் மகத், ஐஸ்வர்யாவை கண்டித்ததை பார்க்க பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
பிக் பாஸ் 2 வீட்டில் மகத், ஐஸ்வர்யா ஆடும் ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் உள்ளது. இதை எல்லாம் பார்த்தும் பார்க்காதது போன்று இருக்கிறார் கமல் ஹாஸன் என்ற புகார் எழுந்தது.
இந்நிலையில் தான் கமல் நேற்றைய நிகழ்ச்சியில் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.

மகத்
கமல் ஹாஸன் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டிருப்பதை பார்த்து மகத் இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போன்று பாவம் போன்று முகத்தை வைத்திருந்தார். முதல் முறையாக மும்தாஜுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கமல். இந்த சீசனில் அறிவு மட்டம் ரொம்ப கம்மியாக இருக்கு என்று கமல் சொன்னதும் ஏற்றுக் கொண்டார் மும்தாஜ்.

யாஷிகா
கமல் லேசா கோபத்தை காண்பித்ததற்கே மகத், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் அப்படியே அப்பாவி போன்று முகத்தை வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தனர். மும்தாஜ் கோபப்படாமல் அமைதியாக இருப்பதை பார்த்து கமல் அவரை பாராட்டியுள்ளார். மும்தாஜின் குணத்தை கமல் பாராட்டியதை பார்த்து பார்வையாளர்கள் விசில் அடித்தனர்.

மருத்துவ முத்தம்
பிக் பாஸ் முதல் சீசனில் இருந்தவர்களின் அறிவு மட்டும் அதிகமாக இருந்தது. அதனால் நிகழ்ச்சியை நடத்த எனக்கு ஆனந்தமாக இருந்தது. அதற்காக அவர்கள் உத்தமர்கள் என்று எல்லாம் நான் கூறவில்லை. அங்கே மருத்துவ முத்தம் எல்லாம் இருந்தது. அங்கேயும் தவறுகள் நடந்தது. கிட்டத்தட்ட அடிதடி வரைக்கும் சென்றது. ஒருத்தர் சுவர் ஏறிக் குதித்தார், பாதியிலேயே போயிட்டார், என்னென்னமோ நடந்தது. ஆனால் மொத்தத்தில் அனைவரும் ஒரு தெளிவுடன் இருந்தார்கள் என்று கமல் தெரிவித்தார்.

எல்.கே.ஜி.
கிள்ளிட்டான், குத்திட்டான், அடிச்சிட்டான்னு காட்டுவது எல்கேஜி மாதிரி இருக்கிறது என்று கூறி மகத்துக்கு செம நோஸ்கட் கொடுத்தார் கமல்.
மகத் பெரிய உத்தமர் என்பது போன்று அவரின் புதுக் காதலி யாஷிகா பரிந்து பேசினார். ஆனால் அவரின் பேச்சு நம்மை மட்டும் அல்ல கமலையும் எரிச்சல் அடைய வைத்தது. உங்களுக்கு மட்டும் தான் கெட்ட வார்த்தை தெரியும் என்று நினைக்கிறீர்களா? எங்களுக்கும் தெரியும். எனக்கு நிறைய தெரியும் ஆனால் உங்களுக்கு கற்றுத் தர மாட்டேன் என்று செம டோஸ் விட்டார் கமல்.

உலகமகா நடிப்பு
கமல் பேசப் பேச ஐஸ்வர்யாவும், மகத்தும் அம்பி மாதிரி நடித்துக் கொண்டிருந்தனர். உலக நாயகனுக்கு முன்பே நடிப்பா? மகத், மும்தாஜை மட்டும் அல்ல சின்னப் புள்ளைய கூட அப்படி பேசாதீங்க என்றார் கமல். மும்பையில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் இங்கே நடக்கக் கூடாது என்று விஜய் டிவியிடம் சொன்னேன். அவர்களும் பெரிய மனசு பண்ணி நடக்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதை மறுபடியும் நடத்திக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இது பாம்பே பிக் பாஸ் அல்ல என்று கொந்தளித்தார் கமல். கமல் சார், நீங்கள் தாளித்ததை பார்க்க சந்தோஷமாக இருந்தது. ஆனால் இதுவும் இந்தி பிக் பாஸ் காப்பியாக இருக்குமோ என்ற பயமும் லைட்டாக எட்டிப்பார்த்ததை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications











