நேற்று பிக் பாஸில் கமல் பேசியபோது இந்த 3 விஷயங்களை கவனித்தீர்களா?
சென்னை: பிக் பாஸ் 2 ஃபினாலேவில் பல உண்மைகளை தைரியமாக பேசிய கமல் ஹாஸனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி அப்பாடி ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. டைட்டிலை மக்களின் ஆதரவு பெற்ற ரித்விகாவுக்கு கொடுத்தார்கள். பிக் பாஸ் வழக்கமாக மக்களை ஏமாற்றுவது போன்று நேற்று செய்யவில்லை. அதுவே ஆறுதல் தான்.
ஐஸ்வர்யாவுக்கு பதில் ஜனனிக்கு ரன்னர் அப் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று குரல்கள் எழும்பின.

உண்மை
ஃபினாலே நிகழ்ச்சியில் கமல் பல உண்மைகளை தைரியமாக பேசினார். ஹாட்ஸ் ஆஃப் சார். பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படி நடக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் அது தான் உண்மை என்பதை நேற்று சொல்லாமல் சொல்லிவிட்டார் அவர். ஹவுஸ்மேட்டாக நடித்த கமல் நான் என்ன வேணும் என்றேவா செய்கிறேன், செய்யச் சொன்னாங்க செய்றேன் என்று கூறியதை கேட்டு பார்வையாளர்களுக்கு எல்லாம் புரிந்துவிட்டது.

பிடிக்கவில்லை
பணம், புகழ் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு பிக் பாஸ் வீட்டிற்கு வந்த போட்டியாளர்களுக்கு அங்கு நடந்த சண்டைகளை எல்லாம் பார்த்துவிட்டு ஒன்னுமே வேண்டாம் எங்களை விட்டால் போதும் போகிறோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். இதை சில முன்னாள் போட்டியாளர்கள் கூறினர். இந்நிலையில் ஹவுஸ்மேட் விளையாட்டின்போது கமலும் இதையே தான் தெரிவித்தார்.

போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் போலியாக உள்ளனர் என்று தொடர்ந்து கூறப்பட்டது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை வெளியே அனுப்புவது தான் தனக்கு பிடித்தமான மொமன்ட் என்றார் கமல். வெளியே வரும் போது தான் ட்ரூ செல்ப், உங்களின் கண்ணிலேயே தெளிவு தெரியும் என்றார் கமல். போட்டியாளர்கள் போலியாக இருப்பது குறித்து கமல் நேற்று மட்டும் அல்ல முன்பும் கூட பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தைரியம்
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோதிலும் அது குறித்த உண்மைகளை உரக்கச் சொன்ன கமல் ஹாஸனை பார்வையாளர்கள் பாராட்டியுள்ளார்கள். அடுத்த சீசனை தயவு செய்து தொகுத்து வழங்க வேண்டாம் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளார்கள். நான் மக்களை பார்த்து பேச வருகிறேன் என்று கூறும் கமல் இந்த கோரிக்கையை ஏற்பாரா?


Click it and Unblock the Notifications











