Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் பில்லா நடிகை
பில்லா படத்தில் 'செய் ஏதாவது செய்...' என்ற கருத்தாழம் மிக்க பாடலுக்கு நடனமாடியவர் ஹசல்கீச். பில்லா 1 படத்தில் நயன்தாரா, நமீதா என்ற இரண்டு கவர்ச்சி நாயகிகள் இருந்தாலும் இந்த பாடலுக்கு பிரபல மாடல் ஹசல் கீச் நடனமாடியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
பிரபலமான விளம்பரங்களில் நடித்துள்ள ஹசல் கீச் இவர் பாடிகார்ட் இந்திப் படத்தில் சல்மான் கானுடன் நடித்திருக்கிறார். மேக்சிமம் என்ற இந்திப்படத்திலும் நடித்திருக்கும் இந்த கவர்ச்சிப் புயல் இப்போது பிக் பாஸ் சீசன் 6 ல் நுழைகிறார்.
யனா குப்தா முதலில் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தது. ஆனால் ஏனோ அவர் வரவில்லை. இப்போது ஹசல் கீச் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது குறித்து கருத்து கூறியுள்ள ஹசல், ரியாலிட்டி ஷோவில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார். கிம் கார்தஷியன் ஏற்கனவே இதுபோன்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பிரபலமடைந்துள்ளார். தவிர சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் என்பதால் இதில் பங்கேற்க நான் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டேன் என்ற கூறியுள்ளார் ஹசல்.
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் பிரபல கவர்ச்சிப் புயல்கள் மையம் கொண்டுள்ளன. இனி இந்த சூறவளி புகுந்து என்ன செய்யப்போகிறதோ தெரியலையே?