twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மேட்ச் ஃபிக்சிங் கேள்விப்பட்டிருப்பீங்க, பிக் பாஸ் ஃபிக்சிங் தெரியுமா?

    By Siva
    |

    Recommended Video

    Bigg Boss 2 |weekend highlights | மக்கள் ஓட்டா? இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா?

    சென்னை: நேற்று நடந்த எவிக்ஷனை பார்த்த பிக் பாஸ் 2 பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் படி நடக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் மேட்ச் ஃபிக்சிங் போன்று பிக் பாஸ் ஃபிக்சிங் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தொடர்ந்து இரண்டு வாரங்களாக வாக்களித்து ஏமாந்து போயுள்ளனர் பார்வையாளர்கள்.

    ஐஸ்வர்யா

    ஐஸ்வர்யா

    முந்தைய வாரம் யாஷிகாவை வெளியேற்ற ஓட்டு போட்ட பார்வையாளர்கள் நித்யா வெளியேறியதை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். நேற்று ஐஸ்வர்யா வெளியேறுவார் என்று வாக்களித்து காத்திருந்தால் ரம்யாவை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர். தானாக முடிவு எடுப்பது என்றால் எங்களை ஏன் ஓட்டு போடுமாறு கூற வேண்டும் என்று பார்வையாளர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

    கிளாமர்

    யாஷிகா, ஐஸ்வர்யா ஆகிய இருவரும் வட நாட்டு பெண்கள். குட்டி, குட்டியாக உடை அணிந்து கவர்ச்சி காட்டுகிறார்கள். மகத்தும், ஷாரிக்கும் அவர்களை சுற்றி வருகிறார்கள். கிளாமருக்காக அவர்களை பிக் பாஸ் காப்பாற்றிவிட்டார். இது பிக் பாஸ் ஃபிக்சிங் என்று பார்வையாளர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஃபிக்சிங்

    வீட்டில் உள்ளவர்கள் எப்படி நடிக்க வேண்டும் என்று ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்தது போன்று யாரை வெளியேற்ற வேண்டும் என்பதையும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டு பெயருக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பேராதரவு

    பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது கூட ரம்யாவுக்கு இவ்வளவு ஆதரவு இல்லை. ஆனால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அவருக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அடேங்கப்பா, ரம்யாவுக்கு இவ்வளவு ஆதரவா என்று பிரமிக்க வைத்துவிட்டனர்.

    English summary
    Bigg Boss 2 Tamil viewers accuse the programme organizers of fixing the eviction process.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X