மச்சினிக்கும் மாமாவுக்கும் நல்லா ஒர்கவுட் ஆகுதே....
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் கதை தும்பைவிட்டுட்டு வாலைப்பிடிக்கற கதையா இருக்கு.
கதிருக்கு முதல் பொண்டாட்டி தங்காதாம் அதனால அத்தையும், அத்தை பொண்ணு பூஜாவும் முதலில் கதிர் வேற பொண்ணை கல்யாணம் செய்துக்கட்டும் .
அவளுக்கு பிரச்சனைன்னு வெளியில போனவுடனே கதிருக்கு பூஜாவை கல்யாணம் செய்து வச்சுடலாம்னு கனவு காண்றாங்க.

ஜாதகத்துல நம்பிக்கை
ஜாதகத்துல அவ்ளோ..நம்பிக்கை உள்ளவங்க,அதுல பரிகாரம்னு ஒன்னும் இருக்கும்னு நம்பலையே ஏன்? சரி..அதை விடுங்க.. இப்போ கதிருக்கு புடிச்ச மலர் கூட அவனுக்கு நிச்சயதார்த்தம் நடந்துருச்சு. இப்போ, அத்தையும், அத்தை பொண்ணும் வயிறு எரிஞ்சுக்கிட்டு இருக்காங்க.

மச்சினி சுவாதி
காத்திருக்கும் மச்சினி சுவாதிக்கும் ...அதாவது மலரின் தங்கைக்கும் ஐடியாஸ் நல்லா ஒர்கவுட் ஆகுது. மலரை ஐ லவ் யூ சொல்ல வைக்க சுவாதி கதிரைப் பத்தினை எல்லா நல்ல விஷயத்தையும் சொல்லிட்டு வர்றா.

ஐ லவ் யூ
அக்கா மாமா உன்னை எவ்ளோ பெரிய ஆபத்திலிருந்து காப்பாத்தி இருக்கார். இப்பவாவது உனக்கு ஐ லவ் யூ சொல்லணும்னு தோணலையான்னு சுவாதி கேட்கறா... ஆமாம் சுவாதி இப்போ எனக்கு ஐ லவ் யூ சொல்லணும்னு தோணுது.

நாளைக்கு சொல்லு
சரிக்கா நாளைக்கு காலையில எழுந்ததும் மாமாவுக்கு ஐ லவ் யூ சொல்லிடு .உனக்காகப் பார்த்து பார்த்து இந்த பெட்ரூமை ரெடி பண்ணி இருக்கார் பாருன்னு சொல்றா. இப்போ பிரச்சனைன்னு நம்மை பாதுகாக்க வீட்டுக்கே கொண்டு வந்து வச்சு இருக்காங்க.. இப்போவாவது அவர் மேல உனக்கு லவ் வந்துச்சேன்னு சொல்றா சுவாதி.

உங்களுக்கு மாமா
மாமா மலர் ரூம்ல இருக்கா...இத்தனை நாளா நீங்க கஷ்டப்பட்டு இன்னிக்கு டார்கெட் அச்சீவ் பண்ணிட்டீங்க மாமான்னு சொல்றா.என்ன சொல்ற சுவாதின்னு கதிர் கேட்க..நீங்க மலரை போயி பாருங்க உங்களுக்கு ஆசைப்பட்ட கிஃப்ட் தருவான்னு சொல்றா.

மலர் கதிர்
ரூமில் மலர் கதிரோட போட்டோவை எடுத்து மார்போடு அணைச்சுக்கறா...அங்கே கதிர் வர்றான்.இருவரும் பார்த்து நிற்க சீன் முடிஞ்சுச்சுருச்சு.
மலர் தரப்பில் ஏதோ கொலை மர்மம் இருக்க.. இப்போதுதான் நல்ல மூடுக்கு வந்து இருக்கா மலர்.


Click it and Unblock the Notifications











