ஒரு குழந்தை பிறந்த பிறகு .. வாவ் போட வச்ச ஹேமா.. செம அழகு!
சென்னை: திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடுகின்றனர். ஆனால் ஹேமா ராஜ்குமார் இந்த மாதிரி மாறி விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
Recommended Video
அதனால்தான் தற்போது அவர் வெளியிட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் உருகி உருகி கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .தற்போது இந்த போட்டோஸ்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சினிமா துறையை பொறுத்த வரையில் அழகு இருந்தால்தான் அவர்களுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும்.

ஹேமாவின் அழகு
எவ்வளவு பெரிய கதாநாயகியாக இருந்தாலும் சரி திருமணம் முடிந்து விட்டால் அவர்கள் ஓரம்கட்ட படுகிறார்கள். அல்லது கதாநாயகிகளின் தோழியாகவும் அம்மா வாகவும் மாறி விடுகிறார்கள் .அது வரைக்கும் முன்னணி நடிகையாக நடித்தவர்கள் திருமணத்திற்கு பிறகு செகண்ட் ஹீரோயினாக வலம் வருவது தான் தற்போது சினிமாத்துறையில் நடந்து கொண்டிருக்கிறது .

பட்டையைக் கிளப்பும் ஹேமா
இது நடிகர்களுக்கு மட்டும் பொருந்துவதில்லை. எத்தனை வயது ஆனாலும் பேரன் பேத்தி எடுத்தாலும் கூட நடிகர்கள் இப்ப வரைக்கும் ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார்கள். ஆனால் தற்போது சின்னத்திரையின் அழகு பதுமையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹேமா ராஜ்குமார் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் .

அழகான வில்லத்தனம்
இவர் வில்லத்தனம் செய்யும் அழகான மருமகள் ஆகவும் இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்டார். என்னதான் இவர் குடும்பத்திற்குள் பிரச்சினை கிளம்பும்போது ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றினாலும் குடும்பத்திற்கு பிரச்சனை என்று வந்துவிட்டால் முன்நின்று அனைவரையும் அசத்தி விடுகிறார். இவர் இப்படியா என்று யோசிக்கிற அளவுக்கு திடீரென பல்டி அடிக்கும் இவரது குணத்தை பலருக்கும் பிடித்திருக்கிறது.

சூப்பர் நடிப்பு
வில்லத்தனம் என்றாலே பலரையும் பழிவாங்கி கொலை பண்ணுவது மட்டும்தான் என்று இல்லை. ஒரு குடும்பத்திற்குள் இவருடைய கேரக்டரில் எப்படியும் ஒரு சிலர் இருந்து கொண்டிருக்கிறார்கள். அந்த கேரக்டரை அப்படியே தன்னுடைய நடிப்பால் வெளிக்காட்டி ரசிகர்களின் மனதிலும் இடத்தைப் பிடித்திருந்தாலும் தற்போது தான் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

ஜொலிக்கும் அழகு
இவரைப் பார்த்தால் திருமணம் முடிந்தது என்று சொன்னாலே யாரும் நம்பாதவர்கள் தற்போது இவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று சொன்னதுமே நம்ப மறுத்து வருகிறார்கள் .அந்த அளவிற்கு குழந்தை பிறந்த பிறகும் தன்னுடைய அழகில் கவனத்தை செலுத்தி நடிகைகளுக்கு டப் கொடுக்கிற அளவில் ஜொலித்து வருகிறார்.

சித்து போனதால் வருத்தம்
இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் செய்யும் சேட்டைகளை அடிக்கடி வீடியோக்களாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவார். ஆனால் அந்த சீரியலில் இவரது பெஸ்ட் பிரண்ட் ஆக இருந்த சித்ராவின் மரணத்திற்குப் பிறகு இவர் அந்த மாதிரியான வீடியோக்களை வெளியிடாமல் இருந்து வந்தார் .இது இவருடைய ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்து வந்தது .

செம க்யூட்
அதனால் தான் தற்போது ஒரு கலக்கலான போட்டோ ஷூட் ஒன்றை எடுத்திருக்கிறார் .அவர் பார்த்த அழகை அனைவரும் பார்த்து ரசித்து கொள்ளுங்கள் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் காலை வணக்கம் மக்களே என்று அழகை அள்ளி தெளித்திருக்கிறார் .இதை பார்த்ததும் காலையில் இவருடைய ரசிகர்களுக்கு எனர்ஜி பூஸ்ட் ஆக இருந்து வருகிறதாம்.

சேலையில் அழகு
அடிக்கடி புடவை கட்டிக்கொண்டு போட்டோக்களை போட்டுக் கொண்டிருக்கும் இவர் தற்போது மாடல் உடையில் விதவிதமாக ரசிச்சு ரசிச்சு போட்டோ எடுத்து தள்ளி இருக்கிறார் .அதுவும் சிரித்த முகமாக ஒரு கையை இடுப்பில் ஊன்றி ஒரு கையை தலையில் வைத்து தலையை மெல்ல சாய்த்து இவர் கொடுத்திருக்கும் ஸ்டில் பலபேர் மனதில் காலையில் குடிகொண்டு விட்டது .அதனால்தான் தினமும் இந்த மாதிரி போஸ்ட் போட்டு கண்களுக்கு குளுமையை காட்டுங்கள் என்று சில ரசிகர்கள் கெஞ்சியும் வருகிறார்கள்


Click it and Unblock the Notifications











