களைகட்டப்போகும் பிக்பாஸ் தமிழ்.. முதல் சீசன் டூ ஏழாவது சீசன்.. வின்னர், ரன்னர் லிஸ்ட் தெரியுமா?
சென்னை: இந்தியாவில் படு ஃபேமஸான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழிலும் ஒளிபரப்பாகிறது. இதுவரை ஏழு சீசன்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் எட்டாவது சீசன் இன்று தொடங்கவிருக்கிறது. இதனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது மேலும் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கியிருக்கிறது. இந்தச் சூழலில் இதுவரை நடந்து முடிந்த ஏழு பிக்பாஸ் சீசன்களில் யார் வின்னர், யார் ரன்னர் என்பதை குறித்து இதில் பார்க்கலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தமிழ்நாட்டில் மவுசு தனித்திருக்கிறது. 100 நாட்கள், 18 பிரபலங்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதும், அப்போது நடக்கும் விஷயங்களும் கேம் பிளான். முக்கியமாக கையில் மொபைல் இல்லை, வீட்டில் டிவி இல்லை, எந்த வேலையாக இருந்தாலும் தாமே செய்ய வேண்டும் போன்ற பல ரூல்ஸுகள் பிரபலங்களின் உண்மை முகத்தை இந்த சமூகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் தீவிரமான ரசிகர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

பிக்பாஸ் 8: தமிழில் இதுவரை 7 சீசன்கள் நடந்திருக்கின்றன. அவற்றை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். என்னது கமல்ஹாசன் சின்னத்திரை ஷோவை தொகுத்து வழங்குகிறாரா என்ற ஆச்சரியம் முதல் சீசனுக்கு இருந்தது. போகப்போக அது குறைந்தாலும் கமலுக்கென்று ஷோவை பார்ப்பவர்களும் உண்டு. ஆனால் கடந்த சீசனில் கமலின் ஏகப்பட்ட முடிவுகள் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் அவர் பிக்பாஸ் சீசன் 8லிருந்து விலகிவிட்டார்.
விஜய் சேதுபதி: கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து அந்த இடத்துக்கு விஜய் சேதுபதி வந்திருக்கிறார். அடிப்படையில் நல்ல சிந்தனையுடைய விஜய் சேதுபதி எப்படி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்களிடம் ஆவல் இருக்கிறது. முக்கியமாக விஜய் சேதுபதி மனதில் பட்டதை யாருக்கும் யோசிக்காமல் நேரடியாக, தெளிவாக சொல்லக்கூடியவர். எனவே இவரிடம் ஹவுஸ்மேட்ஸ் எப்படி சமாளிக்கப்போகிறார்கள் அல்லது இவர் எப்படி அவர்களை சமாளிக்கப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
போட்டியாளர்கள் லிஸ்ட்: நிகழ்ச்சியானது இன்று தொடங்குகிறது. இந்த சீசனில் போட்டியாளர்களாக தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர், இயக்குநர் ரஞ்சித், சீரியல் நடிகர் அர்னவ், அருண் பிரசாத், நடிகர் தீபக், கானா பாடகர் பால் டப்பா, கோகுல்நாத், நடிகர் விஜே விஷால், நடிகர் சந்தோஷ் பிரதாப், தொகுப்பாளினி ஜாக்குலின், நடிகை பவித்ரா ஜனனி, மகாராஜாவில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சச்சனா, நடிகை சுனிதா, நடிகை அன்ஷிதா, தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
வின்னர், ரன்னர்: இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்த 7ஆவது சீசன் வரை யார் வின்னர், யார் ரன்னர் என்பதை பார்க்கலாம். அதன்படி பிக்பாஸ் 1 - வின்னர் ஆரவ், ரன்னர் சினேகன். பிக்பாஸ் 2 - வின்னர் ரித்விகா, ரன்னர் ஐஸ்வர்யா. பிக்பாஸ் 3 - வின்னர் முகேன், ரன்னர் சாண்டி மாஸ்டர். பிக்பாஸ் 4 - வின்னர் ஆரி, ரன்னர் பாலாஜி. பிக்பாஸ் 5 -வின்னர் ராஜு, ரன்னர் பிரியங்கா. பிக்பாஸ் 6 - வின்னர் அஸீம், ரன்னர் விக்ரமன். பிக்பாஸ் 7 - வின்னர் அர்ச்சனா, ரன்னர் மணிச்சந்திரா.


Click it and Unblock the Notifications











