Bigg Boss 7 - பிக்பாஸ் ரன்னர் அப் மணிசந்திரா?.. அவருக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. இதுவே பெரிய தொகைதான்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனின் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் அர்ச்சனாதான் டைட்டில் வின்னர் என்று சொல்லப்படுகிறது. அவரைத் தொடர்ந்து ரன்னர் அப்பாக மணிசந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எதுவாக இருந்தாலும் இன்று மாலை தெரிந்துவிடும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தொடங்கியது. இதில் பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, அனன்யா, ஐஷு, விஜய் வர்மா, நிக்சன், பூர்ணிமா, மாயா, விசித்திரா, கூல் சுரேஷ், ஜோவிகா, யுகேந்திரன், சரவண விக்ரம், அக்‌ஷயா, ரவீனா, மணிசந்திரா, விஷ்ணு, வினுஷா ஆகிய 18 பேர் முதலில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.

Here is the details about Bigg Boss Tamil 7 Runner up Mani Salary

ரெட் கார்டு: இந்த சீசனில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் பெரிய அளவில் பிரபலம் இல்லாதவர்கள். எனவே பிக்பாஸ் 7 போர் அடித்துவிடுமோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே இருந்தது. ஆனால் பிரதீப் ஆண்டனி வீட்டுக்குள் இருந்தவரை வீடு களைகட்டியது. ஆனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அதேபோல் எழுத்தாளர் பவா செல்லதுரை தனது உடல்நிலையை காரணம் காட்டி வெளியேறினார்.

வைல்டு கார்டு என்ட்ரி: இதனையடுத்து வைல்டு கார்டு மூலம் அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, அன்னபாரதி உள்ளிட்டோர் வீட்டுக்குள் வந்தனர். அதேபோல் ஏற்கனவே எவிக்ட் செய்யப்பட்ட விஜய் வர்மாவும், அனன்யா ராவ் ஆகியோரும் மீண்டும் வீட்டுக்குள் வந்தனர். போட்டியாளர்கள் பெரும்பாலும் சுவாரசியமாகவே நிகழ்ச்சியை நகர்த்தி சென்றனர். இருந்தாலும் கமல் ஹாசனின் பெயர் இந்த நிகழ்ச்சியில் ரொம்பவே டேமேஜ் ஆகியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

டைட்டில் வின்னர்: இந்த சூழலில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று நடக்கவிருக்கிறது. இதற்கிடையே டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தகவல் ஒன்று கசிந்திருக்கிறது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றிலேயே வைல்டு கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்து டைட்டில் வின்னராக மாறியது என்றால் அது அர்ச்சனாதான் என்பது குறிப்பிடத்தக்கது

ரன்னர அப் மணி?: ரன்னர் அப்பாக மணிசந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் 7 ஆரம்பித்த சில வாரங்களிலேயே மணிசந்திரா வெளியேறிவிடுவார் என்றுதான் ரசிகர்களால் கருதப்பட்டது. ஏனெனில் அவரும், ரவீனாவும் வீட்டுக்கு வெளியே இருந்த தங்களது நெருக்கமான பழக்கத்தை பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் தொடர்ந்துகொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கேம் விளையாடியது போன்ற தோற்றமும் இருந்தது.

இதனாலேயே மணி மீது ரசிகர்களில் ஒருதரப்பினர் அதிருப்தியில் இருந்தனர். ஆனால் இப்போது மணி இறுதிச்சுற்றுக்கு வந்து ரன்னர் அப் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மணிசந்திராவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு அவருக்கு 15,000 ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிகிறது. மொத்தம் 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த அவருக்கு 15,75,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X