பிக்பாஸ் தமிழ் சீசன் 5... இவர் தான் 5 வது கன்ஃபார்ம் போட்டியாளர்
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று மாலை பிரம்மாண்டமாக துவங்கப்பட உள்ளது. மாலை 6 மணிக்கு துவங்கும் இந்நிகழ்ச்சி இரவு 11 மணி வரை நடைபெற உள்ளது. இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த சீசனில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் பற்றி பல விதங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று, பிக்பாஸ் துவக்க விழாவிற்கான ஷுட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இறுதி போட்டியாளர்கள் பட்டியல் வெளியாகி வருகிறது.
Recommended Video
இதுவரை கன்ஃபார்ம் போட்டியாளர்களாக கானா பாடகியான இசைவாணி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடிக்கும் ராஜு ஜெயமோகன், பிரபல தொகுப்பாளர் அபிஷேக் ராஜா, காஸ்ட்யூம் டிசைனர் மதுமிதா ஆகிய நான்கு பேரின் பெயர்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் மலேசிய பிரபல மாடல் நதியா சாங்கும் தனக்கு ஆதரவு தருமாறு வீடியோ வெளியிட்டுள்ளார்.
கன்ஃபார்ம் போட்டியாளர்கள், பிக்பாஸ் துவக்க விழாவில் அசத்தலாக ஆடி அசத்தி உள்ளனர். இவர்களை தொடர்ந்து ஐந்தாவது கன்ஃபார்ம் போட்டியாளராக நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளாராம்.
திருநங்கையும், பிரபல மாடலுமான நமிதா மாரிமுத்து தமிழ் திரைப்படங்கள் சிலவற்றில் பணியாற்றி உள்ளார். Miss Trans star International போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட முதல் திருநங்கை இவர் தான். அந்த போட்டியில் இவர் வெற்றியும் பெற்றார்.
சில டிவி சீரியல்கள், நாடோடிகள் 2 படம் ஆகியவற்றில் நடித்து புகழ்பெற்றவர். சமுத்திரக்கனி உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்த நாடோடிகள் 2 படத்தில் பிரித்திகா என்ற ரோலில் நடித்தார். லாக்டவுன் சமயத்தில் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு, பலரின் பாராட்டை பெற்றவர்.
ஏற்கனவே நடிகை ஷகீலாவின் மகளும் திருநங்கையுமான மிலா பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்வதாக கூறப்படும் நிலையில், தற்போது நமீதா மாரிமுத்துவின் பெயர் கன்ஃபார்ம் போட்டியாளராக சேர்க்கப்பட்டுள்ளது. மிலாவும் பிக்பாஸில் பங்கேற்பது உறுதியானால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் மூன்றாம் பாலின போட்டியாளர்கள் என்ற பெருமையை இவர்கள் பெறுவார்கள்.


Click it and Unblock the Notifications











