Ethirneechal - ஆதிகுணசேகரன் இல்லாத எதிர்நீச்சல்.. டிஆர்பி ரேட்டிங் என்ன தெரியுமா?.. மாஸ் காட்டும் சீரியல்

சென்னை: Ethirneechal (எதிர்நீச்சல்) எதிர்நீச்சல் சீரியலில் பிரபலமான ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் இல்லாத சூழலில் டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

சன் டிவியி ஒளிபரப்பான கோலங்கள் நெடுந்தொடர் மூலம் இயக்குநராக பிரபலமானவர் திருச்செல்வன். அதனையடுத்து பிற நெடுந்தொடர்களையும் இயக்கி வந்த அவர் தற்போது சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கிவருகிறார். தமிழ்நாட்டின் தற்போதைய சென்சேஷன் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல்தான். ஏனெனில் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள்வரை பார்க்கிறார்கள்.

 Here is the This Week Serial TRP Rating Details Ethirneechal Got First Place

ஆதிகுணசேகரன் மாஸ்: அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அந்த சீரியலில் வந்த ஆதிகுணசேகரன் கதாபாத்திரம். ஆணாதிக்க சிந்தனையுடன் படித்த பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைப்பது போன்ற அந்த கேரக்டர் டிசைன் செய்யப்பட்டிருந்தது. அதில் இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து நடித்திருந்தார்.

அதகளம் செய்த மாரிமுத்து: சினிமாவில் மாரிமுத்து எவ்வளவு பிரபலம் ஆனாரோ அதே அளவு எதிர்நீச்சல் சீரியலும் அவருக்கு பெற்றுக்கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால் சமூக வலைதளங்களில் சென்சேஷன் டாபிக்காகவே மாறியிருந்தார் அவர். நக்கலான பேச்சு, அசால்ட்டான உடல்மொழி, தொண்டையை செருமுவது, அவர் கொடுக்கும் டைமிங் கவுண்ட்டர்கள் என அத்தனையும் கொண்டாடப்பட்டது.

உயிரிழந்த மாரிமுத்து: ஆனால் சில வாரங்களுக்கு முன்பு வளசரவாக்கத்தில் எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது உடல்நிலை அசௌகரியம் செய்ய தானே காரை ஓட்டிக்கொண்டு சூர்யா மருத்துவமனையில் அட்மிட் ஆனார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அடுத்தது யார்: மாரிமுத்து உயிரிழந்ததை அடுத்து எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதிகுணசேகரன் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதன்படி முதலில் வேலராமமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவரோ சினிமாவில் பிஸியாக இருப்பதால் ஒத்துக்கொள்ளாமல் இழுத்தடித்துவந்தார். இதனையடுத்து நடிகர் பசுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அவர் நடிக்க ஒத்துக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

டிஆர்பி: இதற்கிடையே ஆதிகுணசேகரன் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு சென்றுவிட்டதாக காட்சியை நகர்த்தினார் திருச்செல்வம். அடுத்த ஆதிகுணசேகரனுக்கு ஆள் கிடைக்கும்வரை இப்படி செய்யலாம் என்ற எண்ணத்தில் இயக்குநர் ஸ்மார்ட் மூவ் செய்திருப்பதாக ரசிகர்கள் அவரை கொண்டாடினர். இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் இந்த வார டிஆர்பி ரேட்டிங் தெரியவந்திருக்கிறது.

அதன்படி 10.79 புள்ளிகளை பெற்று எதிர்நீச்சல் முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது. ஆதிகுணசேகரன் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மாஸாக இயக்குநர் சீரியலை நகர்த்தி செல்வது மக்களை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் கயல் சீரியல் பிடித்திருக்கிறது. அதேபோல் மூன்றாவது இடத்தில் சுந்தரி நாடகம் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X