Bigg Boss 7 - கோரியோகிராஃபர் டூ பிக்பாஸ் சீசன் 7 ரன்னர் அப்.. மணி சந்திராவின் வரலாறு தெரியுமா?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. இதில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்த அர்ச்சனா டைட்டிலை வென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. ரன்னர் அப்பாக மணி சந்திரா வந்திருக்கிறார் என்றும் ஒரு தகவல் ஓடுகிறது. இந்த சூழலில் மணி சந்திரா குறித்து மேற்கொண்டு விவரங்களை இதில் பார்க்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தமிழ்நாட்டில் பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். முதல் சீசனிலிருந்தே களைகட்டும் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. மொத்தம் 100 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட், தானாக வெளியேறிய பவா செல்லதுரை போக மற்றவர்கள் எவிக்ட் செய்யப்பட்டனர்.

Here is the unknown details about Bigg Boss Tamil 7 Runner Up Manichandra

வைல்ட் கார்ட் என்ட்ரி: ஏற்கனவே எவிக்ட் செய்யப்பட்ட விஜய் வர்மா, அனன்யா ஆகியோர் வைல்ட் கார்ட் மூலம் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றனர். பிரதீப் ஆண்டனி இருந்தவரை களைகட்டிய நிகழ்ச்சி அவரது வெளியேற்றத்துக்கு பிறகு சுவாரசியமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் மற்ற போட்டியாளர்களும் தங்களால் முடிந்தவரை சுவாரசியமாகவே நகர்த்தி சென்றனர்.

டைட்டில் வின்னர்: இந்த சூழலில் பிக்பாஸ் ஏழாவது சீசனின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மக்கள் அளித்த வாக்குகளின்படி அவர் டைட்டில் வின்னராக வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் ரன்னர் அப்பாக மணி சந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற ஒரு தகவலும் கசிந்திருக்கிறது.

யார் இந்த மணி?: இந்த சூழலில் மணியை பற்றிய மேலதிக விவரங்களை இதில் பார்க்கலாம். மணி சந்திரா பெங்களூருவில் கடந்த 1994ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தாய் பெயர் ஷிபா சந்திரா தந்தை பெயர் ரமேஷ் சந்திரா ஆகும். இவருக்கு நிஷா என்ற ஒரு தங்கையும் இருக்கிறார். பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட மணிக்கு நடனத்தின் மீது சிறு வயதிலிருந்தே பெரும் ஆர்வம் இருந்தது. இதனால் முறைப்படி நடனம் கற்றுக்கொண்ட அவர் சின்னத்திரையில் நடனம் ஆட தொடங்கினார்.

ஜோடி சீசன் 9 வின்னர்: அந்த வகையில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட பத்தாவது சீசனின் மூலம் டான்சராக சின்னத்திரையில் அறிமுகமானார். அதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி சீசன் 9 டைட்டில் வின்னராக மாறினார் மணி சந்திரா. அதேபோல் கிங்ஸ் ஆஃப் டான்ஸ் ஷோவின் முதல் சீசனில் அரையிறுதி வரை சென்றார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் Vs டான்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு கோரியோகிராஃபியும் செய்திருக்கிறார் மணி.

நடன பள்ளி: இவை தவிர்த்து பெங்களூருவில் சொந்தமாக நடன பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகவும் அதன் மூலம் பலருக்கு நடனம் சொல்லிக்கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. நாய்கள் மீது தனி பாசம் உடைய மணி சந்திரா அதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துவருவதும் குறிப்பிடத்தக்கது. மணிசந்திராவுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் யார் என்றால் நடன அமைப்பாளர் சாண்டி மாஸ்டர்தான். அதனை அவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X