சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயகனுக்கே கத்தரி! அவருக்கு பதில் இவராம்..
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சரவணன் மீனாட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்திலேயே கத்திரி போட்டுள்ளார் இயக்குநர். ஆம்.. சரவணன் கதாபாத்திரத்தில் நடித்த இர்பானுக்கு பதிலாக, பிரேம் குமார் களமிறக்கப்பட்டுள்ளார். பிரேம்குமாரும் அமுல்பேபி போல இருப்பதால் சீரியலில் ஒன்றிப்போய் கிடக்கின்றனர் ரசிக சிகாமணிகள்.

செந்தில்-ஸ்ரீஜா திருமணம்
திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் சரவணன் மீனாட்சி. ஏற்கனவே அந்த கேரக்டரில் நடித்த மிர்சி செந்தில், ஸ்ரீஜா ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர்.

படு நெருக்கம்
அந்த சீரியலின் அடுத்தகட்ட படப்பிடிப்பிலும் கதாநாயகன், கதாநாயகி சரவணன், மீனாட்சி என்ற பெயர்களில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலின் பலமே கதாநாயகன் மற்றும் நாயகியின் காதல் சிணுங்கல்களும், நெருக்கமும்தான்.

இர்பான்- ரக்ஷிதா
தற்போது ஒளிபரப்பாகிவரும் சரவணன் மீனாட்சி தொடரில், சரவணனாக இர்பானும், மீனாட்சியாக, ரக்ஷிதா என்ற நடிகையும் நடித்து வந்தனர். இந்த இர்பான் ஏற்கனவே கனாகாலும் காலங்கள் சீரியலில் நடித்து பிரபலமானவர்.

மனதை தேற்றிய ரசிகர்கள்
சரவணன் மீனாட்சி முதல்பாகத்தில் செந்தில் மற்றும் ஸ்ரீஜாவை பார்த்து செட் ஆகிப்போன மனதுடன் இருந்த ரசிகர்கள், கொஞ்சம் கொஞ்சமாக இர்பான்-ரக்ஷிதா ஜோடியை பார்த்து மனதை தேற்றிவந்தனர். இந்த ஜோடியும் வஞ்சகமே இல்லாமல் நெருக்கம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வந்தது.

வெள்ளித்திரைக்கு இர்பான்
இந்நிலையில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்த இர்பானால் மேற்கொண்டு இந்த சீரியலில் நடிக்க முடியவில்லையாம். இதனால் அவரை மாற்றிவிட முடிவு செய்தது சீரியல் குழு. கத்தி உள்ளிட்ட சில படங்களில் இர்பான் நடித்துக்கொண்டிருப்பது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

பிரேம்குமார் என்ட்ரி
கதைப்படி சரவணன் மற்றும் மீனாட்சிக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன. எனவே, நிச்சயத்துக்கு வரும் மாப்பிள்ளை டிப்-டாப்பாக மாறிவிட்டதாக காண்பிக்க திட்டமிட்ட சீரியல் குழு, இர்பான் கேரக்டரில் நடிக்க பிரேம்குமாரை அழைத்து வந்தது. இந்த பிரேம்குமாரும் விஜய் டிவி ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சையமானவர்தான்.

இவருக்கு பதில் இவர்
விஜய் டிவியை கலக்கிய கனாக்கானும் காலங்கள் சீரியலின் ஐந்தாம் பாகத்தில் நடித்தவர்தான் பிரேம்குமார். அழகான முகவெட்டு கொண்ட பிரேம்குமாரை கதாநாயகனாக முடிவு செய்த சரவணன் மீனாட்சி டீம், கடந்த 14ம்தேதி முதல் அதை செயல்படுத்தியும் விட்டது. கதைப்படி, நிச்சயதார்த்தத்திற்கு ஆயத்தமாகிறார் சரவணன். முழு மேக்கப்புடன், பட்டு வேட்டி, சட்டை கட்டியபடி மீனாட்சி வீட்டில் ஆஜராகிறார் சரவணன். அப்போதுதான் 'இவருக்கு பதில் இவர்' என்று இர்பான்-பிரேம்குமார் முகங்கள் காண்பிக்கப்பட்டன.

கலக்குங்க பாஸ்..
பிரேம்குமார் வந்தபிறகு சும்மா இருந்தால் கேரக்டர் ஒட்டுமான என்ன? எனவே, மீனாட்சியுடன், சரவணன் மிகவும் அன்னியோனியமாக இருப்பது போன்ற காட்சிகளை அடுத்தடுத்து வைத்து கதையோடு பிரேம்குமாரை இணைக்க படாதபாடு பட்டுவிட்டார் இயக்குநர் பிரவீன். மெயின் கதாபாத்திரத்தை மாற்றியதால் ரசிகர்கள் கோபிக்க கூடாது என்பதற்காக, வேட்டையன் கதாபாத்திரத்தை வைத்து, ரசிகர்களிடமே பேசும்படியான காட்சியையும் சரவணன் மீனாட்சியில் அமைத்திருந்தார் அதன் இயக்குநர்.


Click it and Unblock the Notifications











