Thirumanam Serial:ஜனனியுடன் இருந்தா சக்தியை.. பின்னே இவளுடன் இருந்தால் அவளையா?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் இருமனம் கலந்த திருமணமே இல்லையே ஏன்?
சந்தோஷ் ஜனனியின் தோழி சக்தியை காதலிச்சுட்டு, ஜனனியை கல்யாணம் செய்துக்க நேரிட்டது.
ஜனனி தங்கச்சி அனிதா பாவம் சந்தோஷ் தம்பி நவீனை காதலிச்சுட்டு, இப்போ அத்தை மகனை கல்யாணம் பண்ணிக்கும் கட்டாயத்துக்கு உள்ளாகறா.

ஜனனி சந்தோஷ்
சந்தோஷ் சக்தின்னு ஒரு பெண்ணை காதலிச்சுட்டு இருக்கான்.சக்தி வீட்டில் தெரிஞ்சு பிரச்சனை ஆகிறது. சந்தோஷ் வீட்டில் ஜனனியைப் பார்த்து கல்யாணம் செய்து வச்சுடறாங்க. சக்தியை சந்தோஷ் காதலிச்ச விஷயத்தை பிறகுதான் சொல்கிறான் சந்தோஷ். டைவர்ஸ் பண்ணிக்கலாம்ங்க...என்னை நம்பி இருக்கற சக்திக்கு என்னால துரோகம் செய்ய முடியாதுன்னு சந்தோஷ் சொல்றான்.ஜனனியும் மனசுக்குள்ள ஆயிரம் இருந்தாலும் புதைச்சுகிட்டு,சரின்னு சொல்லிடறா.

ஜனனி ஓட்டுதல்
சந்தோஷ் குடும்பத்தில் ஜனனி ரொம்ப ஒட்டுதலாகி எல்லாருக்கும் ஜனனியைப் பிடிக்கும் வகையில் குடும்ப குத்து விளக்கா நடந்துக்கறா. சந்தோஷுக்கு காலப் போக்கில் ஜனனியைப் பிடிச்சு போனாலும், சக்தியை நினைக்கும்போது அவனுக்கு ஜனனியுடன் சந்தோஷமாக இருக்க மனமில்லை.

இருந்த நேரத்தில்
சக்தியை மறந்து ஒரு நாள் சந்தோஷ் ஜனனியை முத்தமிட போன நேரத்தில் சக்தியின் போன் வருது. அன்று தன்னை சந்தோஷ் ஏத்துக்குவான்னு ஆசையா இருந்த ஜனனி ஏமாந்து போனதில் குமுறி குமுறி அழறா.அதன் பிறகு சந்தோஷ் ஜனனி முகத்தைக்கூட பார்க்கலை. என்னவாக இருக்கும்னு பார்த்தால், சக்தி வெளிநாட்டில் இருந்து வர்றா.

ஜனனி நினைவு
சக்தியுடன் அவன் நேரத்தை செலவிடலாம்னு அவளுடன் ரெஸ்ட்டாரெண்ட் போறான். இன்னிக்கு என்ன விசேஷம்..ஸ்பெஷலா அழைச்சுக்கிட்டு வந்திருக்கேன்னு கேட்கறான் சந்தோஷ். நீ எல்லாத்தையும் மறந்துருவே சந்தோஷ். இன்னிக்குத்தான் நாம முதல்முதலா சந்திச்சுக்கிட்ட நாள்னு சொல்றா. சாரி சக்தி இப்போ நினைவுக்கு வருதுன்னு சொல்றான் சந்தோஷ்.

நாளை நினைச்சு பாரு
சந்தோஷ் கண்ணை மூடிக்கிட்டு, நாம சந்திச்ச அந்த நாளை நினைச்சு பாரு..என்ன தெரியுதுன்னு கேட்கறா சக்தி. அவனும் கண்ணை மூடிக்கிட்டுத்தான் இருக்கான். ஜனனி மாலையுடன் உட்கார்ந்து தான் மாப்பிள்ளையாக வருவதைப் பார்த்தது... ஜனனிக்கு தாலி காட்டியது..அவளுக்கு பொட்டு வச்சு விட்டது இதுதான் அவனுக்கு நினைவு வருது.
என்னடா ஜனனிகூட இருக்கும்போது சக்தியை நினைச்சுக்கறே... சக்தி கூட இருக்கும்போது ஜனனியை நினைச்சுக்கறே... உனக்கு யார்தான் வேணும்?


Click it and Unblock the Notifications











