பார்க்கும் போதே பதறுதே.. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை.. முடியை வெட்டியதும் கதறிய அம்மா

மும்பை: நடிகை ஹினா கான் சமீபத்தில் தனக்கு 3ம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பதை அறிவித்த நிலையில், அதற்கான சிகிச்சைக்கு தயாராகி விட்டார். கீமோதெரபி செய்வதற்காக தனது தலைமுடியை தானே வெட்டிக் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அப்போது அவருடன் இருந்த அம்மா அழும் காட்சிகள் ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்துகிறது.

இந்தி டிவி நடிகையான ஹினா கான் கடந்த 2008 ஒளிபரப்பான இந்தியன் ஐடல் எனும் பாப் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். பிக் பாஸ், நாகினி உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Hina Khan Breast Cancer

பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ள ஹினா கான் தற்போது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் துடித்துப் போயுள்ளனர். சீக்கிரமே பூரணமாக குணமாகிவிடும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பவதாரிணி உயிரிழப்பு: இந்த ஆண்டு தொடக்கத்தில் இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அனைத்து இசை பிரியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. கடைசி வரை அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதே தெரியாது என்றெல்லாம் தகவல்கள் வெளியானது. மேலும், பாலிவுட் நடிகைகளான மனிஷா கொய்ராலா, லிஸா ரே, சோனாலி பிந்த்ரே உள்ளிட்ட பல பாலிவுட் நடிகைகள் புற்றுநோய் பாதிப்பில் சிக்கித் தவித்து போராடி மீண்டுள்ளனர். இந்நிலையில், ஹினா கானும் இதில் இருந்து மீண்டு வருவார் என ரசிகர்கள் உறுதியாக உள்ளனர்.

36 வயதில் கேன்சர்: நடிகை ஹினா கானுக்கு கேன்சர் இருக்கும் தகவல்கள் பாலிவுட்டில் கசிந்த நிலையில், தனக்கு ஸ்டேஜ் 3 மார்பக புற்றுநோய் இருக்கிறது என ஹினா கான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், யாரும் பயப்பட வேண்டாம் என்றும் விரைவில் குணமாகி விடுவேன் என்கிற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

சமந்தா பாராட்டு: ஹினா கானுக்கு இப்படியொரு பிரச்சனை இருப்பதை அறிந்த ரசிகர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான சினிமா பிரபலங்கள் மற்றும் பாலிவுட் நடிகைகள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். நடிகை சமந்தா சோஷியல் மீடியாவில் பதிவிட்ட பதிவில், "ஹினா நீ ரொம்பவே ஸ்ட்ராங் எதற்கும் கவலைப்படாதே, நிச்சயம் புற்றுநோய் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து வருவாய்" எனக் குறிப்பிட்டார். மயோசைட்டிஸ் நோய் பாதிப்பில் இருந்து சமந்தா மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

முடியை வெட்டிய ஹினா கான்: பிக் பாஸ் சீசன் 11ல் போட்டியாளராக பங்கேற்று முதல் ரன்னர் அப்பாக மாறி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் ஹினா கான். நாகினி சீசன் 5ல் நாகினியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பிக் பாஸ் சீசன் 14ல் முன்னாள் போட்டியாளராகவே உள்ளே நுழைந்து மீண்டும் அதிரடி காட்டினார். ஹேக்கட், அன்லாக், விஷ் லிஸ்ட், ஷிண்டா ஷிண்டா நோ பாப்பா உள்ளிட்ட பல இந்தி படங்களிலும் நடித்த இவர் புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைவதற்கான கீமோதெரபி சிகிச்சைக்காக தனது முடியை வெட்டிக் கொண்டார். தற்போது அதன் வீடியோவையும் ஹினா கான் வெளியிட்டுள்ளார்.

கண்ணீர் சிந்திய அம்மா: தனது மகளுக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது என்பதை அறிந்ததில் இருந்தே ஹினா கானின் அம்மா பதறிப்போய் உள்ள நிலையில், கண் முன்னே சிகிச்சைக்காக மகள் அழகிய கூந்தலை இழக்க நேரிடுகிறதே அவருக்கு என்ன ஆகுமோ என்கிற அச்சத்தில் அழுது புலம்பும் காட்சிகளை வீடியோவாக எடுத்து ஹினா கான் வெளியிட்டுள்ளார். மேலும், தன்னுடைய இந்த கேன்சர் போராட்டத்தை முழுவதுமாக டாக்குமெண்ட் செய்து வெளியிடப் போவதாகவும் இதுபோன்ற பாதிப்பில் இருக்கும் பெண்களுக்கு இது நிச்சயம் தைரியத்தை கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X