மார்பக புற்றுநோயால் போராடும் நடிகைக்கு திருமணம்.. 3வது ஸ்டேஜ் கேன்சர் காதலியை கைவிடாத காதலர்!

மும்பை: இந்தி டிவி சீரியலின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹினா கான் கடந்த ஆண்டு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார். கீமோ தெரபிக்காக மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு தனக்காக தனது ரசிகர்கள் பிரார்த்தனை செய்துக் கொள்ள வேண்டும் என உருக்கமாக கேட்டுக் கொண்டார். இந்நிலையில், இன்று தனது நெடுநாள் காதலரை எளிமையான முறையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் செய்துக் கொண்டார்.

இந்திய சினிமாவில் பல முன்னணி நடிகைகள் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சில நடிகைகள் புற்றுநோய் பாதிப்புக் காரணமாக சொந்த வாழ்க்கையையும் திரை வாழ்க்கையையும் இழந்துள்ளனர். மோனிஷா கொய்ராலா, மம்தா மோகன் தாஸ் உள்ளிட்ட ஒரு சில நடிகைகள் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு மீண்டும் நடித்து வருகின்றனர்.

Hina Khan who struggles in breast cancer now marries her long time boy friend Rocky Jaiswal
Photo Credit:

நடிகை ஹினா கான் புற்றுநோய் பாதிப்பில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைகளை முறையாக எடுத்து வருகிறார். இந்நிலையில், தன்னை எந்த நிலையிலும் கைவிடாத காதலரை திருமணம் செய்துக் கொண்டது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. உண்மையான காதல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என ரசிகர்கள் மணமகன் ராக்கி ஜெய்ஸ்வாலை பாராட்டி வருகின்றனர்.

ஹினா கானுக்கு 37 வயதாகிறது: 1987ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பிறந்த நடிகை ஹினா கானுக்கு 37 வயதாகிறது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிறந்த ஹினா கான், 2008ம் ஆண்டு இந்தியன் ஐடல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். அதன் பின்னர், 2009ம் ஆண்டு ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Yeh Rishta Kya Kehlata Hai தொடரில் 2016ம் ஆண்டு வரை லீடு ரோலில் நடித்து பிரபலமானார். அந்த தொடரின் சூப்பர்வைஸிங் தயாரிப்பாளரான ராக்கி ஜெய்ஸ்வாலை காதலிக்கத் தொடங்கினார்.

Hina Khan who struggles in breast cancer now marries her long time boy friend Rocky Jaiswal
Photo Credit:

13 ஆண்டுகால காதல்: சின்னத்திரை மற்றும் பாலிவுட்டில் சில படங்களில் நடித்து கலக்கி வந்த ஹினா கான் பாய் ஃபிரெண்ட் ராக்கி ஜெய்ஸ்வால் உடன் சுமார் 13 ஆண்டுகள் காதல் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஆண்டு திடீரென ஹினா கானுக்கு மார்பக புற்றுநோய் ஸ்டேஜ் 3 கேன்சர் இருப்பது தெரிய வந்த நிலையில், ஒட்டுமொத்தமாகவே உடைந்து போய்விட்டார். ஆனால், அந்த நிலையிலும் அவரை அவரது காதலர் கைவிடவில்லை.

ஹினா கான் திருமணம்: ஜூன் 4ம் தேதியான இன்று குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ எளிமையான முறையில் தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் ஹினா கான். சற்றுமுன் அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, உருக்கமான போஸ்ட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இரண்டு வெவ்வேறு உலகங்களிலுருந்தும் நாம் காதல் என்ற ஒரு பெரிய பிரபஞ்சத்தையே படைத்துள்ளோம். நமது வேற்றுமைகள் மறைந்து, இதயங்கள் ஒன்றாக கலந்து கடைசி வரை இணைந்து வாழ்வோம் என்று பதிவிட்டுள்ளார். இஸ்லாமியரான ஹினா கான் மற்றும் இந்துவான ராக்கி ஜெய்ஸ்வாலுக்கு ரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து மழை தூவி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X