பல நாட்கள் கழிவறையில் அழுதேன்.. தற்கொலை செய்ய நினைத்தேன்.. பிக் பாஸ் போட்டியாளர் வேதனை!
சென்னை: தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் இருப்பதால், பல மொழிகளில் இந்த ஷோ, பல சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர், அந்த நிகழ்ச்சி தன்னை தற்கொலைக்குத் தூண்டியதாக பேட்டி அளித்துள்ளது இணையத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
வெளிநாடுகளில் எடுக்கப்படும் படங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இந்தியாவில் நம்ப வசதிக்கு ஏற்ப மாற்றி அமைப்பது உண்டு. அப்படி, ஆங்கில தொலைக்காட்சியில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிதான் பிக் பிரதர். திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து.2007ஆம் ஆண்டு இந்தியில் பிக்பாஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பால்,தமிழ்,தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் பிக்பாஸ் 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில்,7வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ள நிலையில், அடுத்த வாரம் கிரெண்ட பினாலே நடைபெற உள்ளது. இதில், இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
சித்ரவதை செய்தார்கள்: தமிழ் பிக் பாஸை கமல் தொகுத்து வழங்கி வருவது போல, இந்தி பிக் பாஸை 17 சீசன்களாக சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 17 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் அனுராக் தோபால்,சில தினங்களுக்கு முன்பு போட்டியிலிருந்து வெளியேறினார். தற்போது இவர், பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த கொடுமைகள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் என்னை ஒரு ஓட்டலில் தங்க வைத்தார்கள். அந்த இரண்டு நாட்களும் என் போனை என்னிடம் கொடுக்கவில்லை. எனது குடும்பத்தினருடன் பேச பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் அனுமதிக்கவில்லை. நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியேறிய பிறகும் அவர்கள் என்னை எவ்வளவு சித்திரவதை செய்கிறார்கள்.

மோசமான நாட்கள்: அங்கிருந்த இரண்டு நாட்கள் எனக்குத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றியது. அதே போல, நான் பிக் பாஸ் வீட்டில் இருந்த போதும் ஒட்டுமொத்த வீடும் எனக்கு எதிராக இருந்தது. தனிமையை உணர்ந்தேன். கழிப்பறையில் பல முறை அழுது இருக்கிறேன். அந்த மோசமான நாட்களை என் வாழ்க்கையில் என்னைக்கும் நான் மறக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











