»   »  நிஜ வாழ்க்கையில் இணையும் 'பிக் பாஸ்' காதலர்கள்!

நிஜ வாழ்க்கையில் இணையும் 'பிக் பாஸ்' காதலர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : 'பிக் பாஸ்' நிகழ்ச்சி என்பது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிதான். ஆனால், அதையும் தாண்டி அந்த வீட்டிற்குள் நடக்கும் காதல், மோதல், சண்டை என ஒரு சில விஷயங்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன.

இதற்கு சமீபத்திய உதாரணம் தமிழ் 'பிக் பாஸ்' வீட்டில் ஆரவ் மீது கொண்ட காதலால் மன உளைச்சல் ஏற்பட்டு ஓவியா வீட்டை விட்டு வெளியேறியது தான். தனது பாஸிட்டிவ், ஸ்ட்ரைட் ஃபார்வர்டு சிந்தனைகளால் பெரும்பாலான ரசிகர்களால் கவரப்பட்ட ஓவியா கடைசி வாரத்தில் மிகுந்த மன அழுத்தத்தோடு நடந்துகொண்டார்.

Hindi 'biggboss' couple are getting ready to marriage

ஹிந்தி பிக்பாஸிலும் இப்படி ஒரு காதல் கதைதான் நடந்தது. அங்கு 'பிக் பாஸ்' வீட்டிற்குள் இருந்தபோதே அஷ்மித் பட்டேல், மஹெக் சாஹல் இருவரும் காதலித்தனர். இந்த அஷ்மித் பட்டேல், சில தினங்களுக்கு முன் ரகசியத் திருமணம் செய்துகொண்ட ரியா சென்னின் முன்னாள் காதலர் ஆவார்.

கடந்த 12 வருடங்களாக நண்பர்களாக இருக்கும் இவர்கள் 'பிக் பாஸ்' வீட்டுக்குள் இருக்கும்போது, காதல், மோதல் எல்லாம் வந்து தற்போது மீண்டும் இருவருக்குமிடையே காதல் துளிர்த்திருக்கிறது. இப்போது இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் இன்னும் ஆறு மாதங்களில் இவர்களது திருமணம் நடக்கவுள்ளதாம்.

English summary
Hindi 'biggboss' couple are getting ready to marriage. Ashmit patel and maheck chahal are the biggboss contustants in hindi.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos