டிவி சீரியலுக்கு நல்லா தேடுறாங்கய்யா 'பப்ளிசிட்டி'

By Siva

சென்னை: ஏ ஹை முஹப்பதைன் நடிகை இஷிதா கைது என்று ஒரு செய்தி இணையதளத்தில் பரவி வருகிறது.

பாஸ் படங்களுக்கு மட்டும் தான் குண்டக்க மண்டக்க பப்ளிசிட்டி அதாங்க விளம்பரம் தேடுவீர்களா. நாங்களும் தேடுவோம்ல விளம்பரம் என்று கிளம்பிவிட்டார்கள் இந்தி சீரியல்கள். ஏ ஹை முஹப்பதைன் நடிகை இஷிதா கைது என்ற செய்தி இணையதளத்தில் பரவி வருகிறது. யாருடா இந்த இஷிதா எதற்காக கைது செய்யப்பட்டார் என்று பலரும் செய்தியை படித்தால் தான் தெரிகிறது இது டிவி சீரியலில் வரும் காட்சி பற்றியது என்று.

Hindi TV serials tactic to get publicity

அடப்பாவிகளா சீரியலை பார்க்க வைக்க எப்படி எல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்கப்பா என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள். தமிழகத்தில் இல்லத்தரசிகள் முதல் வேலைக்கு செல்லும் பெண்கள் வரை பலரும் சீரியல்கள் பார்க்கிறார்கள். இந்நிலையில் சீரியல்களுக்கு இப்படியும் விளம்பரம் தேடலாம் என்று நம்ம ஊர் சீரியல்காரர்களுக்கும் ஐடியா கொடுப்பது போன்று உள்ளது இந்த செய்தி.

சும்மாவே மாலையில் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்தால் மனைவிமார்கள் சீரியல் பார்க்கிறேன் என்று டிவி ரிமோட்டையும் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், சாப்பாட்டையும் இடைவேளை நேரத்தில் தான் கொடுக்கிறார்கள் என்று கணவன்மார்கள் புலம்புவதை கேட்க முடிகிறது. இதில் சீரியல் மோகத்தை தூண்ட இப்படியும் விளம்பரமா என்று அவர்கள் நொந்து கொள்கிறார்கள்.

நாங்க எல்லாம் பப்ளிசிட்டி தேடாமலேயே எங்கள் சீரியல்களை பார்ப்பார்கள் என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்கள் தமிழ் சீரியல்கள் எடுப்பவர்கள். நல்லதுங்க...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X