twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நீயா? நானா?' கோபிநாத்தைத் தெரியும்.. இயக்கும் ஆன்டணியைத் தெரியுமா?!

    By Mayura Akilan
    |

    -ஜெயலட்சுமி சுப்ரமணியன்

    நீயா? நானா? படப்பிடிப்பு வடபழனி செந்தில் ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு பிஸியான நேரத்தில் பேட்டி வேண்டுமே என இயக்குநர் ஆண்டனியிடம் கேட்க, இன்னிக்கு சூட்டிங் ஆரம்பிச்சதே லேட். பர்ஸ்ட் டாபிக் முடியவே 5 மணி ஆயிருச்சு. ன்னும் 2 டாப்பிக் இருக்கு அதிகாலை 4 மணிவரை சூட்டிங் போகும். பிரேக் டைமில் கொஞ்சம் பேசலாம் என்றார். ஓகே சொல்லி பசியோடு இருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

    திருநெல்வேலி..

    திருநெல்வேலி..

    நான் திருநெல்வேலிக்காரன்தான். மும்பையில் நிறைய நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறேன். அதோடு நிறைய பயணங்கள் சென்றிருக்கிறேன். அதுதான் என்னை இதுபோன்ற நிகழ்ச்சிகளை இயக்கவும், தயாரிக்கவும் தூண்டுகோலாக இருந்தது.

    பயணம் ரொம்ப பிடிக்கும்

    பயணம் ரொம்ப பிடிக்கும்

    ‘அதிக தூரம் பயணம் செய்தவனின் பாதங்கள் தொழப்படக்கூடியவை' என்று கூறுவார்கள். எனக்கு பொதுவாகவே பயணம் ரொம்ப பிடிக்கும். இந்தியாவின் பல பகுதிகளுக்கு பயணம் சென்றிருக்கிறேன். அது ஏற்படுத்திய தாக்கம்தான் நீயா? நானா?, என் தேசம் என் மக்கள் போன்ற நிகழ்ச்சிகளை இயக்க உறுதுணையாக இருக்கிறது.

    நிறைய படிப்பேன்

    நிறைய படிப்பேன்

    பொதுவாகவே நான் நிறைய படிப்பேன். அதுதான் செய்தி சார்ந்த பல நிகழ்ச்சிகளை இயக்க காரணமாக அமைந்துவிட்டது. கேள்விகள் ஆயிரம், குற்றம் நடந்தது என்ன? மக்கள் யார் பக்கம், போன்ற எனது முந்தைய நிகழ்ச்சிகள் அனைத்துமே செய்திகளை மையப்படுத்தியதாகத்தான் இருக்கும். இப்போது நீயா? நானா? நிகழ்ச்சியை கடந்த 8 ஆண்டுகளாக தயாரித்து இயக்கி வருகிறேன். என் தேசம் என் மக்கள் நிகழ்ச்சியை தயாரித்து வருகிறேன்.

    சீரியல் இயக்க பிடிக்கும்

    சீரியல் இயக்க பிடிக்கும்

    நிகழ்ச்சி தயாரிப்பு மட்டுமல்லாது, திருநங்கை ரோஸ் தொகுத்து வழங்கிய இப்படிக்கு ரோஸ் ரியாலிட்டி ஷோ, ரோஜாக்கூட்டம் என்ற சீரியலும் இயக்கியுள்ளேன்.

    சுதந்திரமாக உணர்கிறேன்

    சுதந்திரமாக உணர்கிறேன்

    விஜய் டிவிக்காக மட்டுமே நான் நிகழ்ச்சிகளை தயாரிக்க காரணம், இங்கே நான் சந்தோஷமாக, சுதந்திரமாக உணர்கிறேன்.

    இது தமிழகத்தின் குரல்

    இது தமிழகத்தின் குரல்

    நீயா? நானா? நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு கோணங்கள், பல்வேறு கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறோம். நாங்கள் கருத்தைத் திணிப்பதில்லை. இது தமிழ்நாட்டு மக்களின் குரலாக இருப்பதால்தான் வெற்றிகரமாக 8 வருடமாக ஒளிபரப்பாகி வருகிறது.

    இதற்கு என்று அரசியல், சாதி, மதம் என்று தனி கலர் இல்லை. அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களையும் பதிவு செய்கிறோம். அதுதான் நீயா? நானா? நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றி என்று கூறிவிட்டு அடுத்த எபிசோட் இயக்க தயாரானார் ஆன்டணி.

    கீப் இட் அப், ஆன்டணி!

    English summary
    Neeya Naana director Antony has given an exclusive interview to Oneindia Tamil readers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X