Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
Lakshmi Stores Serial: மத்திய அமைச்சரை எளிதில் அடித்துவிட முடியுமா? என்னங்க கதை எழுதறீங்க?
சென்னை: சன் டியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் சாதாரண பெண்ணான மகாலட்சுமி, மத்திய இணை அமைச்சர் வீட்டுக்கு வந்து, அவங்களை பளார் பளார்னு கன்னத்தில் அடிக்கறது சாத்தியம் இல்லாத ஒன்றாக இருக்கிறது.
சகுந்தலா தேவி மத்திய இணை அமைச்சரா இருக்காங்க. மகாலட்சுமி நடத்தி வரும் லட்சுமி ஸ்டோர்ஸை அடைய விரும்பறாங்க.அதோட மகாலட்சுமியின் கணவர் தேவராஜ்தான் மினிஸ்டரின் லீகல் அட்வைசராவும் இருக்கார்.
அதனால், இவங்க குடும்பத்துக்கு மகாலட்சுமியின் குடும்பம் நெருக்கமானதா இருந்தாலும், மகா லட்சுமி, சகுந்தலா தேவிக்கு இடையே மட்டும் எப்போதும் சண்டை நடந்து கொண்டே இருக்கிறது. இருவருக்கும் அடிக்கடி நடக்கும் அக்கப்போர் தாங்க முயடியலை.
சூப்பர் கதை
ஒரு மத்திய இணை அமைச்சர், அவரை எதிர்த்து நியாயத்துக்கு போராடும் பெண் என்று எவ்வளவு அருமையான கதை. இதை வைத்து கதையை எப்படி போராட்டமாகவும், த்ரில்லகாவும் கொண்டு போகலாம். ஆனால், இங்க என்னடான்னா, மினிஸ்டர் வீட்டுக்கு ரொம்ப எளிதாக போயி, அவங்களை பளார் பளார்னு அடிக்கறது அவ்வளவு சாத்தியமான காரியமா? மினிஸ்டருக்கு பாதுகாப்பு இருக்காதா?
லோக்கல் ஸ்டேஷனில்
என்னதான் ஆதாரம் இருந்தாலும், சகுந்தலா தேவி தனக்கு சொந்தமான சாக்லேட் கம்பெனியில் போதை மருந்து கலக்கற கலப்படம் பற்றினப் பேச்சுக்கள் அடங்கின வீடியோ ஆதாரம் இருந்தாலும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து புகார் கொடுத்தால் வாங்கும் காலக் கட்டமா இப்போது நடக்கிறது? சிப்பு சிப்புன்னு அதை சொல்லியே மிரட்டிகிட்டே இருக்காங்க மகாலட்சுமி.
கமலாவுக்கு கல்யாணம்
அந்த வீடியோ ஆதாரத்தை என்கிட்டே குடுத்துடு... இல்லேன்னா கமலா கல்யாணம் நடக்காதுன்னு சகுந்தலா தேவி அப்போதும் மிரட்டல் விட, மகாலட்சுமி எல்லாத்துக்கும் தயாராதான் வந்திருக்கேன்னு சொல்லி, மினிஸ்டரை போட்டு அடிக்கறாங்க. மினிஸ்டரும் அடிவாங்கிக்கிட்டு நிக்கறது...இப்படி எல்லாம் கதை எழுத யார் சொல்லித் தராங்க?
நேரம் நல்ல நேரம்
லட்சுமி ஸ்டார்ஸ் சீரியலுக்கு சன் டிவி ரொம்ப நல்ல நேரத்தை ஒதுக்கிக் கொடுத்து இருக்காங்க. அந்த நேரம் யாருக்கு இது நாள் வரை ஒதுக்கப்பட்டு இருந்த நேரம் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், ரொம்பசிறுபிள்ளைத் தனமா இந்த ஸ்க்ரீன் பிளே இருக்கு.கதை நல்ல கதை இனிமேலாவது விழிச்சுகிட்டு,ஸ்கீரின் பிளேயில் கவனம் செலுத்தினால் நேரத்தைத் தக்க வச்சுக்கலாம்.