நோ காஸ்ட்ல சமமான காஸ்ட் வச்சுருக்கீங்களே… கோபிநாத்தின் அதிரடி கேள்வி

சென்னை : விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி நீயா நானாவை தொகுத்து வழங்கி வருகிறார் டிவி தொகுப்பாளர் கோபிநாத்.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.30 மணியளவில் இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த வாரமும் இந்த நிகழ்ச்சி வித்தியாசமான டைட்டிலுடன் ஒளிப்பரப்பாக உள்ளது.

நீயா நானா நிகழ்ச்சி

நீயா நானா நிகழ்ச்சி

பிரபல டிவி தொகுப்பாளர் கோபிநாத் தன்னுடைய நிகழ்ச்சி நீயா நானா மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளவர். இந்த நிகழ்ச்சியை 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறப்பாக நடத்தி வருகிறார் இந்த நிகழ்ச்சிக்கென காத்திருந்து நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.

தொகுப்பாளர் கோபிநாத்

தொகுப்பாளர் கோபிநாத்

இந்த நிகழ்ச்சி கொடுத்த புகழ்மூலம் சினிமாவிலும் கால் பதித்துள்ளார் கோபிநாத். மேலும் விஜய் டிவியிலேயே பல நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் உள்ளார். இவருக்கு காமெடி என்பதே வராதோ என்ற நினைப்பை இந்த நிகழ்ச்சிகளின்மூலம் உடைத்தெரிந்துள்ளார்.இந்த நிகழ்ச்சிகளில் காமெடி கலாட்டாக்களை இவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

விவாத நிகழ்ச்சி

விவாத நிகழ்ச்சி

நீயா நானா தொடர் விவாத நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்துவதும் வெற்றிக் கண்டுள்ளர்ர் கோபிநாத். இருவேறு பிரிவாக இருக்கும் குழுக்களை சிறப்பாக வழிநடத்தி நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு செவ்வதில் கோபிநாத்திற்கு இணை அவரோகவே இருக்கும்.

சலிப்பற்ற நிகழ்ச்சி

சலிப்பற்ற நிகழ்ச்சி

இவ்வாறு இருப்பதால் மட்டுமே நிகழ்ச்சியை இத்தனை ஆண்டுகளாக சலிப்பின்றி அவரால் நடத்தி செல்ல முடிகிறது. வாராவாரம் வித்தியாசமான தலைப்புகளில் நிக்ழ்ச்சியை சிறப்பாக கொண்டு செல்கிறார் அவர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான நிகழ்ச்சியின் பிரமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.

சிறப்பான பிரமோ

சிறப்பான பிரமோ

ஜாதி பார்க்காமல் அரேஞ்ச் மேரேஜ் செய்தவர்கள் மற்றும் ஜாதி பார்த்து காதல் திருமணம் செய்தவர்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்த காரசாரமான விவாதத்தை பிரமோவிலும் பார்க்க முடிந்தது.வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

வித்தியாசமான தலைப்பு

வித்தியாசமான தலைப்பு

இந்த பிரமோவில் நோ காஸ்ட் என்று சொல்லிவிட்டு சமமான காஸ்ட்டை வைத்திருக்கிறார்கள் என்று கோபிநாத் பார்வையாளர்களை பார்த்து கேள்விக் கணைகளை விடுகிறார். இதனால் பேச்சாளர்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவிப்பதையும் பார்க்க முடிகிறது. இதையடுத்து இந்த வாரம் விவாதம் காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X