twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெரியாமலேயே திடீரென வெளியேற்றப்பட்ட சித்தப்பு.. ஹவுஸ்மேட்ஸ் ரியாக்ஷன பாருங்க!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டது ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தெரியவந்துள்ளது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தா சரவணன் தன்னுடைய கல்லூரி பருவத்தில் பெண்களை பேருந்தில் உரசியதாக கடந்த 27ஆம் தேதி கமல்ஹாசன் பங்கேற்ற எபிசோடில் கூறினார். இதனை கமல் அப்போது பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

    ஆனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களை உரசியதாக வெளிப்படையாக நடிகர் சரவணன் பேசியது தேசிய மீடியாக்களிலும் ஒளிப்பரப்பட்டது.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். பாடகி சின்மயி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர்.

    வெளியேற்றம்

    வெளியேற்றம்

    இதைத்தொடர்ந்து கடந்த 29ஆம் தேதி எபிசோடில் தான் பேசியது குறித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சரவணன். இருந்தபோதும் நேற்றைய எபிசோடில் சரவணனை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ், அவரை அங்கிருந்தபடியே, இந்த காரணத்திற்காக வெளியேற்றப்படுவதாக கூறினார்.

    வாய்ப்பு அளிக்கவில்லை

    வாய்ப்பு அளிக்கவில்லை

    இதைத்தொடர்ந்து சரவணன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவர் கடைசியாக தனது ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்க கூட பிக்பாஸ் வாய்ப்பு அளிக்கவில்லை.

    பிக்பாஸ் அறிவிப்பு

    பிக்பாஸ் அறிவிப்பு

    இந்நிலையில் இன்று வெளியான புரமோவில், லிவிங் ஏரியாவுக்கு அனைவரையும் அழைக்கும் பிக்பாஸ் சில காரணங்களுக்காக சரவணன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறினார்.

    கதறல்

    கதறல்

    இதனைக்கேட்ட ஹவுஸ்மேட்ஸ்கள் கண்ணீர் விட்டு அழத் தொடங்கிவிட்டனர். சரவணனை எப்போதும் சித்தப்பு சித்தப்பு என்று அழைத்து வந்த சாண்டியும் கவினும், கண்ணீர்விட்டு கதறினர். அதேபோல் மதுமிதாவும் சரவணன் வெளியேறிய செய்தியை கேட்டு அழுதார்.

    கவலை

    கவலை

    அதேபோல் சேரன் தலையில் கையை வைத்து ரொம்பவும் வருத்தப்படுகிறார். சரவணன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதை கேட்டு ஹவுஸ்மேட்ஸ்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

    English summary
    House mates cries after hearing that Saravan sent out from biggboss season 3.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X