எனக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை.. பரபரக்க வைத்த அபிராமி.. சிக்கிக்கொண்ட மதுமிதா!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 6:அபிராமிக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை..அதிரவைத்த நேற்றைய எபிசோடு-வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டில் பங்கேற்றுள்ள அபிராமி தனக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை என தண்ணீர் பாட்டீலை பாவித்ததால் பிக்பாஸ் வீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் பல்வேறு பிரச்சனைகள், சுவாரசிய சம்பவங்கள், சென்டிமென்ட் சீன்கள் என களைகட்டியது. முதலில் கவினை காதலிப்பதாக கூறினார் அபிராமி.

ஆனால் அவரது காதலை கவின் ஏற்கவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் தனக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை என ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்து குடும்பம் நடத்தி வந்தார்.

முகெனுக்கும் அபிக்கும் பிறந்த குழந்தை

முகெனுக்கும் அபிக்கும் பிறந்த குழந்தை

இந்நிலையில் நேற்று ஹவுஸ் மேட்ஸ்களை சந்தித்த கமல்ஹாசன், கடந்த வாரம் நடந்த சம்பவங்களை செய்தியாக வாசிக்குமாறு ஃபாத்திமாபாபுவிடம் கூறினார். இதைத்தொடர்ந்து செய்தி வாசித்த அவர், முகெனுக்கும் அபிராமிக்கும் குழந்தை பிறந்த சம்பவத்தை கூறினார்.

பெயர் கெட்டுப்போகும்

பெயர் கெட்டுப்போகும்

பின்னர் இதுகுறித்து ஃபாத்திமா பாபுவிடம் கேட்ட மதுமிதா, நான்தான் ஏற்கனவே அதை சொல்லவேண்டாம் என்றேனே ஏன் கூறினீர்கள் என்றார். அந்த விஷயத்தால் அபிராமியின் பெயர்தான் கெட்டுப்போகும் என்றார்.

அறைந்துவிடுவேன்

அறைந்துவிடுவேன்

இதில் ஒன்றும் தவறு இல்லை என்ற ஷெரின், சாக்ஷி, அபிராமி, வனிதா ஆகியோர் ஒன்றுகூடி மதுமிதாவை ஒரு வழியாக்கிவிட்டனர். அபிராமி யாருக்கும் தெரியாத வகையில் மதுமிதாவை அறைந்து விடுவேன் என்றார்.

வரிந்து கட்டிய ஹவுஸ் மேட்ஸ்

வரிந்து கட்டிய ஹவுஸ் மேட்ஸ்

குடும்பத்தினர் ஒன்றாக கூடி கும்மியடித்ததால் நொந்துபோன மதுமிதா தான் ஒரு தமிழ்பெண் தனக்கு பிடிக்கவில்லை என்றார். அவ்வளவுதான், ஷெரின், சாக்ஷி, அபிராமி, வனிதா, கவின், சாண்டி என அனைவரும் வரிந்துக் கட்டிக்கொண்டு வந்து மிதுமிதாவை ஒரு கை பார்த்துவிட்டனர்.

 சிக்கிய மதுமிதா

சிக்கிய மதுமிதா

அபிராமி முகெனுக்கு போட்ட பிட்டில் வசமாக சிக்கிக்கொண்டார் மதுமிதா. மதுமிதா இதுவரை யார் குறித்தும் புரணி பேசியதாக தெரியவில்லை . அதேபோல் வெட்டி சண்டையும் போட்டதாக தெரியவில்லை.

கோபம் இல்லை

கோபம் இல்லை

ஆனால் நேற்று அவர் தமிழ்பெண் என்று கூறிய வார்த்தை மட்டும் சற்று நெருடலை ஏற்படுத்தியுள்ளதை தவிர மதுமிதாவின் மீது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தவில்லை என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X