சிக்கிய வனிதா.. கட்டங்கட்டி ஆப்பு வச்ச ஹவுஸ்மேட்ஸ்! இதைத்தானே எதிர்பாத்தீங்க!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 3 : Day 78 : House mates nominate vanitha

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒத்தை ஆளாக ஹவுஸ்மேட்ஸ்களிடம் சிக்கியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.

நடிகை வனிதா பொதுவாக குரலை உயர்த்தி பேசுவார். இங்கு பேசுவதை அங்கு சொல்வார். கொளுத்திப்போடுவார், சண்டை மூட்டிவிடுவார் என்பதெல்லாம் ஒரு பக்கம்.

அதேநேரத்தில் தவறு என்றால் பட்டேன யாருக்கும் பயப்படாமல் கேள்வி கேட்பார். ஏன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், பிக்பாஸ் ஆகியோரையுமே எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார் வனிதா.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் பலரும் அவரை எதிரி போல் பார்த்து வருகின்றனர். குறிப்பாக அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறார் என்ற குற்றசாட்டை ஹவுஸ்மேட்டுகள் அவர் மீது வைத்து வருகின்றனர்.

வனிதா பெயர்

வனிதா பெயர்

இந்நிலையில் திங்கள் கிழமையான இன்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுகிறது. இதில் மொத்த ஹவுஸ்மேட்ஸும் வனிதாவின் பெயரையே நாமினேட் செய்கின்றனர்.

மூக்கை நுழைக்கிறார்

மூக்கை நுழைக்கிறார்

தர்ஷன், சாண்டி, முகென் ஆகியோர் வனிதாவின் பெயரை நாமினேட் செய்கின்றனர். இதற்கு தர்ஷன் கூறும் காரணம், வனிதா எல்லோர் விஷயத்திலும் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார், ஒன்றும் இல்லாத பிரச்சனையை ஊதி பெரிதாக்குகிறார் என்பது.

டரட்டி கேம்

டரட்டி கேம்

இதனைத் தொடர்ந்து கன்ஃபெஷன் ரூமுக்குள் செல்லும் வனிதா தர்ஷனின் பெயரை நாமினேட் செய்கிறார். தொடர்ந்து பேசும் அவர்,
இதுக்கு அப்புறம் நாமினேஷன் லிஸ்ட்ல தர்ஷன் வருவாரான்னு எனக்கு டவுட்டா இருக்கு. டர்ட்டி பாலிட்டிக்ஸ் டர்ட்டி கேம் விளையாடுறாங்க. கண்ணுக்கு தெரிஞ்சி பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது என்று கூறுகிறார் வனிதா.

டாஸ்க்கிலிருந்து விலகல்

டாஸ்க்கிலிருந்து விலகல்

சேரன் வெளியேறியதால் வனிதாவுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்க பிடிக்கவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேற விரும்பும் வனிதா, கேப்டன் டாஸ்க்கில் இருந்துகூட விலகி விட்டார்.

தொடர வேண்டும்

தொடர வேண்டும்

ஒருவேலை கேப்டன் டாஸ்க்கில் வெற்றி பெற்றால் வனிதாவை யாரும் நாமினேஷன் செய்ய முடியாமல் போய்விடும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் வனிதா பிக்பாஸ் வீட்டிலேயே தொடர வேண்டும். இதனை மனதில் வைத்தே வனிதா கேப்டன் டாஸ்க்கில் இருந்து விலகினார்.

பார்வையாளர்கள் கையில்

பார்வையாளர்கள் கையில்

இந்நிலையில் அவர் ஆசைப்பட்டதுபோலவே ஹவுஸ்மேட்ஸ் அவரை நாமினேட் செய்துள்ளார்கள். வனிதா எதிர்பார்த்தது நடந்துவிட்டது, இனி பிக்பாஸ் வீட்டில் இருக்க வைப்பதும் அவரை வெளியேற்றுவதும் பார்வையாளர்களின் கையில்தான் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X