கவின், சாக்ஷி, லாஸ்லியா முக்கோண காதல் கதை.. அனல் பறந்த ஆர்க்யூமென்ட்.. மத்தவங்க ரியாக்ஷன பாருங்க!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கவின் - சாக்ஷி- லாஸ்லியா இடையேயான ஆர்க்யூமென்ட் அனல் பறந்த போது மற்ற ஹவுஸ்மேட்ஸ்களின் ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடிலும் கவின், சாக்ஷி, லாஸ்லியா ஆகியோரின் முக்கோண காதல் கதையைதான் ஓட்டினார் பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் நாளிலேயே காதல் டாப்பிக்கை எடுத்து கோர்த்துவிட்டார் பிக்பாஸ்.
ஆனால் ஒரு மாதம் கடந்த பிறகும் அந்த கதை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. நேற்றும் இந்த முக்கோண காதல் கதையை வைத்து அனல் பறக்கும் ஆர்க்யூமென்ட் நடைபெற்றது.

குற்றச்சாட்டுக்கள்
நேற்றைய எபிசோடில் கவின், சாக்ஷி, லாஸ்லியாவை தவிர வேறு யாரும் பேசியதாக தெரியவில்லை. கவின், சாக்ஷி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

அரைத்த மாவையே அரைத்து
தொடர்ந்து மூன்று பேரும் மாறி பேசிக் கொண்டிருந்தனர். அதுவும் பேசியக் கதையையே பேசி அரைத்த மாவையே அரைத்தனர். இதனால் பார்வையாளர்களுக்கே வெறுப்பானது.
படுத்தேவிட்டார்
அந்த நேரத்தில் ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரும் கொடுத்த ரியாக்ஷன்.. அப்பப்பா.. ஒருவர் தூங்குகிறார்.. ஒருவர் தலையில் கை வைத்து எப்படாப்பா முடியும் சாமி என்று யோசிக்கிறார். ஒருவர் படுத்தே விட்டார். அந்தளவுக்கு வெறுப்பாகிவிட்டது.

வைரலாகும் இமேஜ்
ஒரு மணிநேரம் பார்க்கும் நமக்கே இவ்வளவு வெறுப்பாகி விட்டது. ஒரு நாள் முழுக்க அதையே கேட்டு, அதையே பார்த்து, அதையே பேசும் ஹவுஸ்மேட்ஸகளுக்கு அலுத்துப்போகாதா? இந்த இமேஜ்தான் இப்போது வைரலாகிறது.


Click it and Unblock the Notifications











