வேண்டும் வேண்டும் சிக்கன் வேண்டும்.. போராட்டம் நடத்திய ஹவுஸ்மேட்ஸ்.. பிக்பாஸ் செய்த வேலையை பாருங்க!

Recommended Video

Watch Video : Bigg Boss 3 Tamil : Promo 3 : Day 68

சென்னை: பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சிக்கன் கேட்டு நடத்திய போராட்டம் பார்வையாளர்களை வெகுவாக ரசிக்க வைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 18 போட்டியாளர்களில் (வனிதா இரண்டாவது முறையாக வைல்டு கார்டு என்ட்ரியானார்) 10 பேர் வெளியேறிய நிலையில் 8 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் தற்போது உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 69 நாட்களை எட்டியுள்ள நிலையில் 8 போட்டியாளர்கள் மட்டுமே எல்லா டாஸ்க்கிலும் பங்கேற்று வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ்கள் பெறும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின்படி அவர்களுக்கு சிக்கன், மட்டன் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

போராட்டம் நடத்திய ஹவுஸ்மேட்ஸ்

போராட்டம் நடத்திய ஹவுஸ்மேட்ஸ்

நேற்றைய எபிசோடில் சிக்கன் சாப்பிட ஆசைப்பட்ட ஹவுஸ்மேட்ஸ்கள் ஸ்டோர் ரூமுக்கு முன்பாக படுத்துக்கொண்டு சிக்கன் வேண்டும் என கேட்டு போராட்டம் நடத்தினர். ஃபிரைடு சிக்கன் வேண்டும் நான்கு பக்கெட் வேண்டும் என முழக்கமிட்டப்படி போராட்டம் நடத்தினர்.

கதவில் காதை வைத்து

கதவில் காதை வைத்து

தட்டுக்களையும் கொண்டுவந்து வைத்துக்கொண்டனர். அதோடு சாண்டியும் தர்ஷனும் ஸ்டோர் ரூமின் கதவில் காதை வைத்துக்கொண்டு சத்தம் கேட்கிறது, உள்ளே சிக்கன் வைக்கிறார்கள் என கூறிக்கொண்டே இருந்தனர்.

ஸ்டோர் ரூம் முன்பு

ஸ்டோர் ரூம் முன்பு

இந்த போராட்டத்தை முதலில் தொடங்கியது தர்ஷன்தான். சாகும் வரை உண்ணாவிரதம் என்று கூறி ஸ்டோர் ரூம் முன்பு படுத்துக்கொண்டார். அவரை தொடர்ந்தே அனைவரும் பங்கேற்றனர்.

ஸ்டோர் ரூம் ஃபோகஸ்

ஸ்டோர் ரூம் ஃபோகஸ்

ஒரு கட்டத்தில் கதவில் இருந்து காதை எடுக்க மறுத்து சிக்கன் வருகிறது வருகிறது என்று புலம்பினர் சாண்டியும் தர்ஷனும். ஆனால் அப்போது உள்ளே சிக்கன் வைக்கவில்லை என்பதை ஸ்டோர் ரூமில் உள்ள கேமராவின் மூலம் ஃபோகஸ் செய்து காட்டினார் பிக்பாஸ்.

சரக்கு வச்சிருக்கேன்

சரக்கு வச்சிருக்கேன்

அடுத்த கொஞ்ச நேரத்தில் சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் என்ற பாடலை போட்டார் பிக்பாஸ். இதனால் துள்ளி குறித்து ஹவுஸ்மேட்ஸ் சிக்கன் வந்துவிட்டது என கத்தி மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

ரசிக்கும்படியாக இருந்தது

ரசிக்கும்படியாக இருந்தது

இதைத்தொடர்ந்து ஸ்டோர் ரூமில் இருந்த ஃபிரைடு சிக்கனை எடுத்து சாப்பிட்டு மகிழ்ச்சியடைந்தனர் ஹவுஸ்மேட்ஸ். சிக்கன் கேட்டு போராட்டம் நடத்திய ஹவுஸ்மேட்ஸ்க்கு சிக்கனை கொடுத்து வயிறையும் மனதையும் நிரப்பி அவர்களை மகிழ்ச்சி படுத்தினார் பிக்பாஸ். நிஜமாவே பிக்பாஸ் வீட்டில் நடந்த இந்த சம்பவங்கள் ரசிக்கும் படியாக இருந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X