பார்த்து பயந்த காலம் போயிடுச்சு.. பதிலுக்கு பதில் மல்லுக்கட்டும் ஹவுஸ்மேட்ஸ்! அதிர்ச்சியில் வனிதா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதாவிடம் ஹவுஸ்மேட்ஸ்கள் பதிலுக்கு பதில் பேசி மல்லுக்கு நிற்பது நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, பிக்பாஸ் வீடு என்னவோ தன்னுடைய வீடு என்பது போல் ராஜ்ஜியம் செய்து வந்தார். மற்றவர்கள் பேசுவது எதையும் கேட்காமல் தான் பேசுவதுதான் சரி என்று பேசி வந்தார் வனிதா.
மேலும் சண்டை மூட்டிவிடுவது கொளுத்தி போடுவது என நாரதர் வேலை செய்து வந்தார். இதனால் வெறுப்பான மக்கள் அவரை மூன்றாவது வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றினர்.

வைல்டு கார்ட் என்ட்ரி
ஆனால் வீட்டில் சண்டை நடக்க வேண்டும் என்று எண்ணிய பிக்பாஸ் வனிதாவை வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் அழைத்து வந்தார். இதனால் வீடு மீண்டும் ரணகளமாகியுள்ளது.

அஞ்சி ஒதுங்கினர்
முன்னர் வனிதா வந்தபோது தர்ஷன் மட்டுமே அவரை எதிர்த்து பேசினார். அவர் செய்த தவறுகளையும் முகத்துக்கு நேராக சுட்டிக்காட்டினார். மற்றவர்கள் பின்னால் பேசினர், சிலர் எதுக்குடா வம்பு என்று அஞ்சி ஒதுங்கினர்.

பதிலுக்கு பதில் பேசி
ஆனால் தற்போது எல்லோருமே வனிதாவை எதிர்த்து பேச தொடங்கிவிட்டனர். குறிப்பாக லாஸ்லியா, மதுமிதாவிடம் மட்டும் சீறி வந்த அவர், தற்போது வனிதாவிடமும் பதிலுக்கு பதில் எதிர்த்து பேசி ஒரு வழியாக்கி வருகிறார்.

குரலை உயர்த்தும் கவின்
அடுத்து கவின், வனிதாவை கண்டாலே பம்மிய கவின் தற்போது நேருக்கு நேராக குரலை உயர்த்துகிறார். ஆனால் பின்னால் தரக்குறைவாக பேசுவதை மட்டும் அவர் கைவிடவில்லை. முன்னால் அக்கா அக்கா என்று பேசினாலும், பின்னால் அவள் இவள் என்று இழிவாக பேசி வருகிறார்.

எகிறிய ஷெரின்
இதுவரை ஷெரின் மட்டுமே வனிதாவுடன் நட்பு பாராட்டி வந்தார். இன்று அவரும் எகிறி விட்டார். இன்றைய புரமோவில் வனிதாவிடம் குரலை உயர்த்தி அவர் சண்டை போடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதிர்ச்சியில் வனிதா
ஹவுஸ்மேட்ஸ்கள் ஆளாளுக்கு தன் மீது பாய்வதால் அதிர்ச்சியில் உள்ளார் வனிதா. வனிதா வெளியே போய்வந்த கேப்பில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு அவர் மீதிருந்த பயம் போய்விட்டது. இதனை உணர்ந்து வனிதா இனி அமையாதியாவார் அல்லது விஸ்வரூபம் எடுப்பாரா என்பது வரும் எபிசோடுகளில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications











