twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா?

    By Siva
    |

    சென்னை: கலாச்சார சீரழிவாக பார்க்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாஸன் தொகுத்து வழங்குவது பலருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.

    தமிழ், தமிழர் கலாச்சாரம் பற்றி பெருமையாக பேசுபவர் உலக நாயகன் கமல் ஹாஸன். ஆனால் அவர் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தமிழர் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    இந்த புகார்களுக்கு மத்தியிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

     நிகழ்ச்சி

    நிகழ்ச்சி

    பகலில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவிக் கழுவி ஊத்துவோரில் பலர் இரவு வந்தால் சரியான நேரத்தில் டிவி முன்பு அமர்ந்து எந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்று கூறுகிறார்களோ அதையே ஸ்நாக்ஸோ, சாப்பாடோ சாப்பிட்டுக் கொண்டே ஹாயாக பார்க்கிறார்கள். பார்த்த பிறகு நிகழ்ச்சியில் அது சரியில்லை, இது சரியில்லை என்று ஆயிரம் குறை கூறுகிறார்கள். இத்தனை புகார் தெரிவிப்பவர்கள் நிகழ்ச்சியை பார்ப்பதை தவிர்க்கலாமே. பிக் பாஸை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லையே.

     பேச்சு

    பேச்சு

    சும்மா இது மோசம் மோசம் என்று பேசிக் கொண்டே இருந்தால் எந்த மாற்றமும் ஏற்படாது. பார்வையாளர்களாக நீங்கள் கொடுத்த அமோக ஆதரவால் தான் அவர்கள் இரண்டாவது சீசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தவர்கள் வீட்டில் நடக்கும் விஷயத்தை தெரிந்து கொள்ளும் ஆவல் உங்களிடம் அதிகம் இருக்கிறது. அதை தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பயன்படுத்திக் கொண்டு பெரும் பணம் பார்க்கிறார்கள். திருந்த வேண்டியது அவர்கள் இல்லை நாம் தான்.

     பிடிக்காது

    பிடிக்காது

    தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்கலாமே என்று யாராவது கூறினால் அதை நாம் ஏற்றுக் கொள்வது இல்லை. நிகழ்ச்சியை நடத்துபவர்களை கோடிகளில் புரள வைப்பதே பார்வையாளர்களாகிய நீங்கள் தான். இதை நீங்கள் புரிந்து கொண்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் உங்களை திருப்திபடுத்த தங்களை மாற்றிக் கொண்டு முறையாக யோசிப்பார்கள். வட இந்திய நடிகைகளை அழைத்து வந்து அரை குறை ஆடையில் உலவ விட்டு, ஆண்களுடன் உரசிப் பேசவிட்டு இது அவர்களின் கலாச்சாரம் என்ற சப்பை கட்டு கட்ட மாட்டார்கள். இந்த மாற்றத்தை ஏற்படுத்த செயலில் இறங்க நாம் தயாரா?

     பொறுப்பு

    பொறுப்பு

    கலாச்சாரத்திற்கு பெயர் போன தமிழகத்தில் பச்சைக் குழந்தைகள் எல்லாம் பலாத்காரம் செய்யப்படும் கொடூரங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வக்கிரமான காட்சிகளை காட்டி மக்களை உசுப்பேற்றிவிடாமல் இருக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன் நிகழ்ச்சிகளை தயாரித்தால் நல்லது. யாஷிகா, மகத் நடந்து கொள்ளும்விதம் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள கமல் ஹாஸனுக்கு மக்களின் குமுறல்கள் தெரியவில்லையா? இப்படிப்பட்ட நிகழ்ச்சியை போய் நீங்கள் தொகுத்து வழங்குவது தான் பலருக்கும் வருத்தம் சார்.

     எதை வேண்டுமானாலும்?

    எதை வேண்டுமானாலும்?

    டிஆர்பியை ஏற்ற எதை வேண்டுமானாலும் செய்யலாம் போன்று. தொழில் போட்டியில் நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்ய இளம் பெண்கள், இளைஞர்களை ஒட்டி உரசவிட்டு நிகழ்ச்சி எடுத்து காட்டுவது தான் பிக் பாஸ் என்ற தரக்குறைவான விமர்சனம் எழுந்துள்ளது. இந்தியில் கண்ட கருமத்தை செய்கிறார்கள் என்பதால் அதை காப்பியடித்து தமிழகத்தில் ஒளிபரப்புவது சரி இல்லை. யார் வேண்டுமானாலும் யாருக்கும் அறிவுரை வழங்கலாம், பக்கம் பக்கமாக எழுதலாம். சம்பந்தப்பட்டவர்கள் திருந்தாமல் நாம் பேசி புண்ணியமில்லை. பார்வையாளர்கள் அவர்கள் செய்ய வேண்டிய விஷயத்தை செய்தால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தானாக திருந்தப் போகிறார்கள்.

    English summary
    Viewers of Bigg Boss 2 Tamil keep on complaining about the show saying that it is against our Tamil culture.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X