Barathi kannamma serial: கண்ணம்மாகிட்டேயே பாரதியை கேட்கிறாளே அஞ்சலி...எவ்ளோ திமிர்!

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில், எல்லாரும் வெறுக்கும் கருப்பு பெண்ணாக கண்ணம்மா இருக்கிறாள். இந்த கண்ணம்மாவை காதலித்து, விரும்பி அம்மாவை எதிர்த்து கல்யாணம் செய்துக்கறான் பாரதி.

ஆனால், அவனின் தம்பி அகிலன் மிஸ் சென்னை அஞ்சலியை காதலிக்க, அவள் அழகி என்பதால், அவளை தன் மருமகளாக்கிக் கொள்ளலாம் என்று ,பாரதி, அகிலனின் அம்மா சவுந்தர்யா அம்மா முடிவு பண்றாங்க.

சவுந்தர்யா அம்மாவுக்கு கருப்பு நிறப் பெண்களை கண்டால் பிடிக்காது. அதனால், சும்மா இருக்கும் போதே கண்ணம்மாவை வெறுக்கறாங்க.ஆனால், அவளையே காதலிச்சு கல்யாணம் செய்துகிட்டு வந்து நிற்கிறான் டாக்டர் பாரதி.இவன் சவுந்தர்யா அம்மாவின் மூத்த மகன்.

கண்ணம்மா பாரதி

கண்ணம்மா பாரதி

பாரதி கண்ணம்மாவை காதலித்து கல்யாணம் செய்து வந்துவிட, சவுந்தர்யா அம்மா கோபமாகி ,அகிலன், அஞ்சலி கல்யாணத்தை நிறுத்திடறாங்க. எப்படியாவது சவுந்தர்யா அம்மா வீட்டுக்கு மருமகளா போயிட்டா, அடுத்து, பாரதியை நம்ம கல்யாணம் செய்துக்கற மாதிரியான நிலையை உண்டாக்கிடலாம்னு கனவில் இருக்கும் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி, அகிலனுக்கு போன் செய்து, நம்ம கல்யாணம் பத்தி பேசு பேசுன்னு நச்சரிக்கறா. அகிலன் அஞ்சலியை உயிருக்கு உயிராய் காதலிக்கறான். இருந்தும், அஞ்சலிக்கு பாரதி மாமாதான் வேணுமாம்.

பொண்டாட்டிகிட்டேயே புருஷனை

பொண்டாட்டிகிட்டேயே புருஷனை

ஒரு வழியாக சவுந்தர்யா அம்மா மீண்டும் அகிலன் அஞ்சலி கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யறாங்க. இதுக்கு பாரதிதான் அம்மாவிடம் பேசி, அவங்க மனசை மாத்தி, இந்த முடிவை எடுக்க வைத்தவன். இந்த சந்தோஷத்தில் குடும்பமே இருக்க அஞ்சலி மட்டும் தப்பு கணக்கு போடறா. எப்படியாவது சவுந்தர்யா அம்மா மருமகளா வீட்டுக்குள்ள போயிட்டா, அக்கா கண்ணம்மாவைத் துரத்திட்டு, அந்த இடத்துக்கு நாம வந்து பாரதியை அடைஞ்சுடலாம்னு கணக்கு போட்டு செயல்படறா அஞ்சலி. அந்த சமயம் பார்த்து கண்ணம்மா வீட்டுக்கு வர, இவகிட்டேயே இவ புருஷனை தர சொல்லி கேட்டுடலாம்னு அஞ்சலி நினைக்கறா.

பிடிக்கலை அகிலனை

பிடிக்கலை அகிலனை

கண்ணம்மா வீட்டு கேட்டைத் திறந்து உள்ளே வர... வந்துட்டியா...வா உன்னை அன்பால அடிச்சு, உன் புருஷனை புடுங்கறேன்னு தனக்குள்ள பேசிக்கறா. கண்ணம்மா அக்கான்னு கூப்பிட, என்றுமே அப்படி கூப்பிடாத அஞ்சலி தன்னை அக்கான்னு கூப்பிட்டதும் நெகிழ்ந்து தங்கையை கட்டிப் புடிச்சுக்கறா. சந்தோஷமா இரு அஞ்சலி..நீ ஆசைப்பட்டபடி, உனக்கும், அகிலனுக்கும் கல்யாணம் நடக்கப் போகுதுன்னு கண்ணம்மா சொல்ல, எனக்கு இந்த கல்யாணத்துல சந்தோஷம் இல்லை அக்கான்னு சொல்றா. ஏன்னு கண்ணம்மா கேட்க, எனக்கு அகிலனை பிடிக்கலை அக்கான்னு சொல்றா.

கன்னத்தில் பொளேர்

கன்னத்தில் பொளேர்

அக்கா சின்ன வயசிலிருந்தே நீ எனக்காக எல்லாத்தையும் விட்டுக் குடுத்துருவே.இப்பவும் ஒண்ணு கேட்கறேன்..எனக்காக விட்டுக் குடுன்னு பீடிகை போடறா. என்ன கேளு அஞ்சலி..நீ வேற யாரையாவது லவ் பண்றியான்னு கேட்கறா. என்னை பெண் பார்க்க வந்தப்போ அகிலனைத்தான் முதலில் பார்த்தேன். ஆனா, பாரதிதான் என் மனசில பதிஞ்சார். நான்தான் பாரதியை பாரதி மாமான்னு முதலில் கூப்பிட்டேன். அவர்தான் என் மனசில் இருக்கார்.அவரைத்தான் நான் லவ் பண்றேன்.எனக்காக பாரதி மாமாவை விட்டுக் குடுத்துடுன்னு அஞ்சலி சொல்ல, அதுவரை கேட்டுக் கொண்டு இருந்த கண்ணம்மா அஞ்சலியின் கன்னத்தில் பொளேர் பொளேர்னு அறை விடறா.

பின்னே..புருஷனையே கேட்டா தங்கச்சியானாலும் குடுத்துட முடியுமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X