Kamal Vs VJS: BB 8 ஹோஸ்ட் எப்படிப்பட்ட ஹெட் மாஸ்டர்? விஜய் சேதுபதிக்கு மார்க் போடும் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி நிகழ்ச்சியின் 8வது சீசன் நேற்றைய தினம் பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களையும் சிறப்பான அறிமுகத்துடன் நிகழ்ச்சியின் ஹோஸ்ட் விஜய் சேதுபதி பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள புதிய பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி விஜய் சேதுபதியின் ஹோஸ்டிங்கில் வெளிப்படை தன்மையுடன் இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். போட்டியாளர்களுடன் சகஜமாக விஜய் சேதுபதி பேசும் நிலையில் இது சாத்தியமே என்று ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

bigg boss 8 show vijay sethupathi 8


பிக்பாஸ் 8 ஷோ: நடிகர் விஜய் சேதுபதி புதிய ஹோஸ்டாக பங்கேற்றுள்ள பிக் பாஸ் தமிழ் 8 ஷோ நேற்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமான துவக்க நிகழ்ச்சியுடன் சிறப்பாக துவங்கப்பட்டுள்ளது. 100 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் அவர்கள் ஒவ்வொருவரையும் இயல்பான தன்னுடைய பேச்சுக்களால் பேசி நடிகர் விஜய் சேதுபதி, புதிதாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் கடந்த ஏழு சீசன்களையும் சிறப்பாக கொண்டு சென்றிருந்தார் நடிகர் கமல்ஹாசன். இவரது வழி நடத்துதலில் இந்த நிகழ்ச்சி சிறப்பாகவே அமைந்திருந்தது.

நடிகர் விஜய் சேதுபதி: இந்நிலையில் தற்போது நிகழ்ச்சியில் புதிய ஹோஸ்ட்டாக பங்கேற்றுள்ளார் விஜய் சேதுபதி. நடிகர் கமல்ஹாசன் மூத்த நடிகர் என்பதால் அவர் மீது போட்டியாளர்களுக்கு தொடர்ந்து ஒரு பயம் இருந்ததை கடந்த சீசன்களில் பார்க்க முடிந்தது. இதனால் அவரிடம் சகஜமாக பேச முடியாமல் போட்டியாளர்கள் திணறியதையும் பார்க்க முடிந்தது. ஐந்து நாட்கள் பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் போடும் போட்டியாளர்கள்கூட கமல்ஹாசன் வரும் வாரயிறுதி நாளில் அடக்கி வாசிப்பார்கள் என்று தொடர்ந்து கமெண்ட்கள் வெளியாகி வருகிறது. இதையொட்டி ஒவ்வொருவரையும் தன்னுடைய அதட்டலான தொனியிலேயே கமல்ஹாசன் அணுகுவார்.

நடிகர் கமல்ஹாசன்: ஒவ்வொருவரையும் தனியாக பேசி அவர்களது தவறை மிடுக்குடன் சுட்டிக்காட்டுவார். தொடர்ந்து ஏழு சீசன்கள் இந்த நிகழ்ச்சி அதிரடியாக இருந்த நிலையில், கடந்த சீசனில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. கமல்ஹாசன் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பதிவாகின. பல்வேறு மீம்ஸ்களுக்கு கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி உள்ளானது. இந்நிலையில் அதிகமான படங்களின் கமிட்மெண்ட் காரணமாக தான் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அறிவித்தார்.

கமல்ஹாசன் vs விஜய் சேதுபதி: இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புதிய ஆங்கராக தற்போது விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இவர் நேற்றைய தினம் துவக்கவிழாவிலேயே நிகழ்ச்சியின் போட்டியாளர்களுடன் சகஜமாக பேசியதை பார்க்க முடிந்தது. அனைவருடனும் நட்புடன் பேசி அவர்களுக்குள் ஒரு அன்னியோன்யத்தை ஏற்படுத்தியுள்ளார் விஜய் சேதுபதி. ஆயினும் தான் இப்படி சகஜமாக பேசுவதால் எப்போதும் இப்படியே இருப்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்றும் அவர் கூறியதையும் பார்க்க முடிந்தது. ஆயினும் 18 போட்டியாளர்களுடனும் மிகவும் சகஜமாக பேசி அவர்களது நிறை குறைகளை சுட்டிக்காட்டி முதல் நாளிலேயே அதிரடி கிளப்பியுள்ளார் விஜய் சேதுபதி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படை தன்மை?: இதனால் இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்து வார இறுதிகளில் கூட அவர் சகஜமாகவே இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கமல்ஹாசனை போல அல்லாமல் விஜய் சேதுபதியுடன் ஒரு நட்புணர்வுடன் போட்டியாளர்கள் பழகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியில் எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லாமல் உண்மை தன்மையுடன் இருக்கும் வாய்ப்பு அதிகம் என்று நடிகை வனிதா விஜயகுமாரும் பிக் பாஸ் குறித்த விமர்சனத்தில் தெரிவித்துள்ளார். இதனால் கடந்த சீசன்களை போல இல்லாமல் இந்த பிக் பாஸ் 8 நிகழ்ச்சி எப்படிப்பட்ட மாற்றத்தை விஜய் சேதுபதி உடன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X