Kizhakku vasal serial: சமரசம் பேசப் போன இடத்தில் இத்தனை உயிர் பலியா?

சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் தேவராஜ், நாகப்பனை சமரசம் பேச தனியாக அழைக்கிறார்.

தேவராஜும், நாகப்பனும் கிழக்கு வாசல் கிராமத்தின் இரு துருவங்கள். அந்த கிராமத்தின் மக்கள் பாதி பேர் தேவராஜுக்கு ஆதரவாகவும், பாதி மக்கள் நாகப்பனுக்கு ஆதரவாகவும் இருக்கிறார்கள்.

பெண்களை தெய்வமாக மதிக்கிறேன் என்று கூறும், தேவராஜ், வீண் சண்டையால் பெண்கள் விதவையாக நேரிடுகிறது என்று எண்ணிய தேவராஜ் நாகப்பனை சமரசம் பேச தனியாக வரும்படி பூசாரியிடம் சொல்லி அழைப்பு விடுகிறார்.

நாகப்பன் மனைவி

நாகப்பன் மனைவி

நாகப்பனின் மனைவிக்கு இப்படி தனது புருஷனை தனியாக வரவழைச்சு தேவராஜ் கொலை செய்து விடுவானோ என்கிற பயம் வந்துருது. போக வேண்டாம் என்று சொல்லியும் நாகப்பன் தைரியமாக என்னதான் நடக்குது பார்த்துட்டு வரேன்,...நீ பயப்படாத..எங்கே யாழினின்னு கேட்கறார். அதற்குள் மனைவி தண்ணீர் கொண்டு வர பதட்டத்தில் சொம்பை கீழே போட்டுடறாங்க. இதெல்லாம் ஒண்ணுமில்லை...போயி இன்னொரு சொம்பு தண்ணீர் குடுன்னு கேட்டு வாங்கி குடிக்கறார்.

யாழினி வெளியில்

யாழினி வெளியில்

யாழினி வெளியில் ஆட்களோடு அப்பாவை வழியனுப்ப நிற்கிறாள். என்னம்மா யாழினி பயந்துட்டியான்னு அப்பா கேட்க...இல்லைப்பா பயம் இருந்தா உங்களை வழியனுப்ப இப்படி நிக்கமாட்டேன். எதுவா இருந்தாலும் பயப்படாதீங்கப்பா.. தைரியம் சொல்லத்தான் இங்க நிற்கறேன்னு சொல்றா யாழினி. நாகப்பன் மகளைத் தட்டிக் கொடுத்துவிட்டு கிளம்புகிறார். ஏலே பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு கிளம்புறார்.

தேவராஜ் தனியாக

தேவராஜ் தனியாக

தேவராஜ் தனியாக செல்வதைப் பார்த்துடறாங்க அவங்க ஆட்கள். ஐயா வீட்டில் எல்லாரையும் சினிமாவுக்கு அனுப்பிட்டு, நம்மையும் வீட்டுக்கு போக சொல்லிட்டு, ரேடியோவுல பாட்டு கேட்க போறேன்னுதானடா சொன்னார். இப்போ தனியா எங்கே போயிகிட்டு இருக்கார்னு பேசிக்கறாங்க. பார்ப்போம்... ஐயா தனியா எங்கே போறார்னு அவரைப் பின் தொடர்ந்து போறாங்க. சொன்ன மாதிரி நாகப்பனும் தனியா வந்து நிக்கறார்.

சமரசம் தேவராஜ்

சமரசம் தேவராஜ்

நீ நான் அழைச்சு வந்ததுக்கு நன்றி...நீ என்ன ஆசைப்பட்டே உன் மக்களுக்காக கோயில் திருவிழாவை நடத்தணும்னு ஆசைப்பட்ட.அதை நான் விடாதது தப்புதான். எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டிடுவோம்னு நாகப்பன் சொல்ல, நமக்கு முடிவு கட்டத்தான் இப்படி பேசறானோன்னு நாகப்பன் நினைக்கிறார். அதற்குள் தேவராஜின் ஆள் ஒருத்தன் நாகப்பனை கொலை செய்ய வர... அதிர்ந்து போகிறார் நாகப்பன். நான் நினைச்சேன், நீ தனியா என்னை வர சொல்லும் போதே... அன்கே பாரு எத்தனை ஆட்களை அழைச்சுட்டு வந்திருக்கே... அதாம்ல நானும் என் ஆட்களை அழைச்சுட்டு வந்திருக்கேன்னு சொல்றார் நாகப்பன்.

நான் வர சொல்லலைன்னு தேவராஜ் சொன்னதை நாகப்பன் நம்பலை...காலையில் பார்த்தால் ஆற்றங்கரையில் பல பிணங்கள். சமரசம் பேச வந்த இடத்தில்இப்படி ஆகிப்போச்சே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X