Nayagi serial: திரு தொடாமல் அனன்யா எப்படி கர்ப்பமானாள்?.. கடுப்பேத்தறாங்க மை லார்ட்!

சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் நடக்க முடியாத, நம்ப முடியாத காட்சிகள் நிறைய ஒளிபரப்பாகிட்டு வருது. ஆனால், ரேட்டிங்கில் முதலிடம் என்கிறார்கள். அதனால்தான் சில விஷயங்களை நாம் இங்கே குறிப்பிட வேண்டி இருக்கிறது.

ஒரு பொண்ணு தனக்குப் பிடித்த ஒரு ஆண் மேல இந்த அளவுக்கு பைத்தியமாக இருப்பாளா என்று உண்மையில் நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு உலகம் தெரியாத பெண்ணாகவா அனன்யாவை அவளை பெத்தவங்க வளர்த்து இருப்பாங்க?

வசதி உள்ள, உலகம் தெரிந்த படித்த, வெளி நாடுகளில் சுற்றிய ஒரு பெண்ணுக்கு பொது அறிவு உலக அறிவு இருக்காதா? இப்போது கிராமத்தில் கூட ஆசைப்பட்ட ஆண் கிடைக்கலைன்னா சந்தோஷமா தனக்குப் பிடிச்ச இன்னொரு ஆணை கல்யாணம் செய்துக்கறாங்க.

அழைச்சுட்டு போங்க

அழைச்சுட்டு போங்க

பெண்களை அறிவியல் மூலம் தொலை நோக்குப் பார்வையில் முன்னோக்கி அழைச்சுட்டு போங்க. அப்படி இல்லாமல் அறிவியலை வைத்து அவர்களை அரை லூசாக்கி அலைய விடாதீர்கள். என்ன கதைங்க இது? திரு மேல் அனன்யாவுக்கு பைத்தியமாம். அமெரிக்காவுக்கு வைத்தியம் பார்க்கப் போன திருவுக்கு ஒரு வேளை நினைவு வராமலும் போகலாமாம். அல்லது அவன் உயிர் பிழைக்காமலும் போகலாமாம். அதனால், அவனது விந்தணுக்களை எடுத்து பாதுகாத்து வைத்தாளாம் அனன்யா.

கருத்தரிப்பு அமெரிக்காவில்

கருத்தரிப்பு அமெரிக்காவில்

அமெரிக்காவில் திருவின் விந்து அணுவை பாதுகாத்து வைத்த அனன்யா, அங்கேயே டெஸ்ட் டியூப் பேபியாக்கி தனது கருப்பையில் வைத்துக் கொண்டு வந்துவிட்டாளாம். அது இப்போதுதான் கன்சீவ் என்கிற அளவுக்கே வெளியில் தெரிய வந்துள்ளது. அவளுக்கு சில நாட்கள் முன்பு கர்ப்பமான ஆனந்திக்கு வயிறு வெளியே தெரிகிறது. சரி, அதை விடுங்கள்...திருவே பிழைக்க மாட்டான் என்றாலும், அப்பா இல்லாத குழந்தையை வளர்க்கும் அளவுக்கு அனன்யா பொறுமைக்காரியா?

ஆனந்தி திரு

ஆனந்தி திரு

திரு ஆனந்தி மேல் உயிரையே வச்சு இருக்கான் , அவளும் வயிற்றில் இவன் பிள்ளையை சுமந்துக்கிட்டு இருக்கா. அதுக்கு மதிப்பு கொடுப்பானா, இல்லை உன் டெஸ்ட் டியூப் பேபிக்கு மதிப்பு கொடுப்பானா? அப்படியே உருகி உருகி அனன்யாவை காதலித்தவனா திரு. வெறுத்து ஒதுக்கியவன்தானே... இப்போது மட்டும் எப்படி சென்டிமென்டை வச்சு அவனை அடிப்பேன்னு சொல்றா அனன்யா?

பெண்கள் காதல்

பெண்கள் காதல்


இந்த சீரியலை குடும்பமே உட்கார்ந்து பார்க்கும்போது பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளும் பார்ப்பார்கள். அவர்கள் அறிவியல் வளர்ச்சியைப் பற்றி மட்டும் தெரிந்து கொண்டால் பரவாயில்லை. காதல் என்பது இதுதான். வெரி ஸ்ட்ராங். அடைய வேண்டும் என்றால் ஒரு ஆண் மகனை எப்படியும் அடைந்து விடலாம்னு எண்ணம் வந்தால், அதை மாற்ற எந்த காட்சியை அய்யா நீங்கள் வைத்துள்ளீர்கள்?

கடுப்பேத்தறாங்க மை லார்ட்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X