twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவில் நடிக்கிறேன்.… 'நீயா? நானா?' கோபிநாத்

    By Mayura Akilan
    |

    நீயா? நானா? நிகழ்ச்சியின் ஹீரோ. மொத்த அரங்கத்தையும் சாதுர்யமான பேச்சினால் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆளுமைத்திறனுக்கு சொந்தக்காரர் கோபிநாத்.

    எந்த ஒரு கருத்தையும் ஆணித்தரமாக முன்வைத்து, சொல்லி வேண்டிய விசயத்தை, தெளிவாக சொல்லி மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் நீயா? நானா?, என்தேசம் என் மக்கள் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத்தின் வெற்றி.

    தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதம் செய்தாலும், பெர்சனலாகவே நான் அமைதியான ஆள்தான் என்கிறார். ஒரு பிஸியான தருணத்தில் அவரிடம் பேசினோம்.

    நான் பத்திரிக்கையாளன்தான்

    நான் பத்திரிக்கையாளன்தான்

    ரிப்போர்டராகத்தான் என்னுடைய பயணம் தொடங்கியது கடந்த 15 ஆண்டுகாலமாகவே நான் இந்த துறையில் இருக்கிறேன். ஜர்னலிஸ்ட்க்கு பலமுகங்கள் உண்டு அதில் ஒன்றுதான் இந்த நீயா? நானா? விவாத நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பது.

    மக்களிடம் தினமும் படிக்கிறேன்

    மக்களிடம் தினமும் படிக்கிறேன்

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிதான் என் சொந்த ஊர். பூர்விகம் வந்து தஞ்சாவூர் ஜில்லா சித்துக்காடு. படித்தது எல்லாமே அறந்தாங்கி, திருச்சியில்தான். இப்போது தினசரி மக்களிடம் இருந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.

    நான் அமைதியானவன்

    நான் அமைதியானவன்

    பொதுவாகவே நான் டிவியில் பேசுவது தவிர வேறு எங்குமே நான் விவாதிப்பதில்லை. கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசும் போது நான் விவாதிப்பேனே தவிர நான், மற்றவர்கள் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொள்வேன்.

    நான் எழுத்தாளன் இல்லை

    நான் எழுத்தாளன் இல்லை

    நான் எழுதுவதால் என்னை எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ள முடியாது. முறையாக எழுதும் எழுத்தாளர்கள் நிறையபேர் இருக்கின்றனர். எனக்கு வாய்ப்பு கிடைப்பதால் நான் எழுதுகிறேன். மீடியாவில், ரேடியோ, டிவி, இன்டர் நெட், சினிமா என ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைப்பேன். எழுத்து விட்டுப் போகக்கூடாது என்பதற்காக நான் எழுதிக் கொண்டிருக்கின்றேன். ரேடியோ ஜாக்கியாகவும் வேலை பார்த்திருக்கிறேன்.

    வித்தியாசமான அனுபவம்தான்

    வித்தியாசமான அனுபவம்தான்

    நீயா? நானா? நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடுமே வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடியதுதான். இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் பலரும் சிரமப்படுபவர்களுக்கு உதவ தயாராக இருக்கின்றனர். எனவேதான் பண உதவி தேவைப்படும் கல்லூரிக்கு 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவினோம். அதைப் பார்ப்பவர்கள் அந்த கல்லூரிக்கு அதிகம் பண உதவி செய்வார்களே என்றுதான் நிகழ்ச்சியிலேயே அதைக் கொடுத்தோம்.

    நான் டிரைவர் மட்டுமேதான்.

    நான் டிரைவர் மட்டுமேதான்.

    எந்த ஒரு நிகழ்ச்சியுமே ஒரு தொகுப்பாளரால் மட்டுமே வெற்றி பெறுவது என்பது முடியாது. நான் வெறும் டிரைவர் மட்டுமே. நீயா? நானா?, என் தேசம் என் மக்கள் நிகழ்ச்சிகளின் வெற்றி ஒரு குழுவிற்கு கிடைத்த வெற்றி.

    இயக்குநர் முடிவு செய்கிறார்

    இயக்குநர் முடிவு செய்கிறார்

    நீயா நானா, என்தேசம் என்மக்கள் இரண்டுமே வெவ்வேறு களம், நீயா நானா விற்கு பேசும் விதம் பாடி லாங்குவேஜ் வேறு விதமாக இருக்கும் அதை தீர்மானிப்பது இயக்குநர்தான்.

    நீயா? நானா? கொஞ்சம் ஃபோர்ஸ் ஆக பேசவேண்டும். அங்கே விவாதம் முக்கியம். என்தேசம் என் மக்கள் நிகழ்ச்சியில் பெரும்பாலும் கேட்கிற இடத்தில் இருக்கிறோம். அங்கு விவாதத்திற்கு இடமில்லை.

    அந்த கோபிநாத் அப்படி இருக்கணும் அந்த டைரக்டர் டிசைட் பன்றாரு அதனால் நான் அப்படி வேகமாக பேசுகிறேன். அதேபோல் என் தேசம் என் மக்கள் இயக்கநர் நான் அமைதியாக பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் நான் இப்படி பேசுகிறேன்.

    மேடையில் பேசுவது

    மேடையில் பேசுவது

    மேடைப் பேச்சுகளில் எப்படி பேசவேண்டும் என்று நான்தான் முடிவு செய்வேன். அது முற்றிலும் வேறு மாதிரியானது. களப்பணியில் நான் ஈடுபட்டதில்லை. அதற்கான குழுவினர்தான் களப்பணியில் ஈடுபடுவார்கள். நான் பங்கெடுக்க முயற்சி செய்வேன்.

    மாணவர்கள் மத்தியில்

    மாணவர்கள் மத்தியில்

    கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் பேசும் போது இரண்டு விசயங்களை வலியுறுத்துவேன். இந்தியாவை நுகர்வோர்களின் தேசமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி இல்லாமல் தொழில் முனைவோர்களின் தேசமாக மாற்றவேண்டும்.

    எஞ்ஜினியரிங் படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேருவதை குறிக்கோளாக கொள்ளாமல் சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டும். மேட் இன் இந்தியா நிறைய உருவாகவேண்டும். அதன் மூலம்தான் நம்முடைய மொழி, அடையாளம், பண்பாடு ஆகியவைகளை உலகத்திற்கு கொண்டுபோய் சேர்க்க முடியும். அந்த சக்தியை நம்மிடையே வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றுதான் பேசுவேன்.

    அந்த நம்பிக்கையை விதைக்கும் போது அதற்கு சிறிதளவேனும் பலன் இருக்கும். மாணவர்கள் மட்டுமல்லாது, தொழில் நிறுவனங்களில் பேசும் போதும் இயல்பான, நாட்டு நடைமுறையோடு தொடர்புடைய விசயங்களைத்தான் நான் பேசுவேன். அதுதான் என்னுடைய விருப்பம்தான்.

    சினிமாவில் நடிக்கிறேன்.

    சினிமாவில் நடிக்கிறேன்.

    சினிமா அழைப்புகள் எனக்கு கடந்த பல வருடங்களாக வந்துகொண்டுதான் இருக்கிறது. நான்தான் அதை மறுத்திருக்கிறேன். டிவிக்கு அடுத்த படியாக சினிமாதான் என்பதை நான் நினைத்தது கிடையாது.

    தொலைக்காட்சியில் எனக்குள்ள முக்கியத்துவம் வேறு. என்னுடைய புரஃபைல் வேறு. அதற்காக சினிமாவில் நடிக்கமாட்டேன் என்பதில்லை. எனக்கு பொருந்தும் மாதிரியான கதாபாத்திரங்கள் சொன்னால் நான் நடிப்பேன். அதனால்தான் கடந்த 8 வருடமாகவே வந்த சினிமா அழைப்புகளை தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆனால் இப்போது இயக்குநர் சமுத்திரகனியின் படத்தில் நடிக்கிறேன். என்னை மனதில் வைத்து எனக்காகவே ஒரு கதாபாத்திரம் உருவாக்கியிருப்பதாக கூறினார். அது எனக்கு பிடிக்கவே ஒத்துக் கொண்டேன் என்றார்.

    நீயா? நானா? சூட்டிங்கிற்கு எல்லோரும் காத்துக் கொண்டிருப்பதாக கூறவே நேரம் ஒதுக்கி பேசியதற்கு நன்றி கூறி விடை பெற்றோம்.

    English summary
    Neeya Naana Gobinath says he is a calm and compsed person.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X