நான் அகிலன் இல்லை, விமலன்.. சூரிய வணக்கத்தில் சூர்யா!!
மாற்றான் விமலன் மாதிரி நான் கூச்சப்படுவேன். இப்போ பரவாயில்லை தைரியமா எல்லோர் முன்னாடியும் பேசுறேன் என்று சன் டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூரியா தெரிவித்தார். சன் டிவியில் தினமும் காலையில் ஒளிபரப்பாகும் சூரியவணக்கம் விருந்தினர் பக்கத்தில் நடிகர் சூர்யா பங்கேற்று தன்னுடைய பெர்சனல், திரை உலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

நானும் நல்லா நடிக்கிறேன்ல….
சினிமாவில் ஆரம்ப காலத்தில் என்னுடைய நடிப்பு பேசப்படும்படியாக இல்லாவிட்டாலும் போகப் போக நானும் நன்றாக நடிக்க கற்றுக்கொண்டேன் என்றார் சூர்யா.

நிறைய பேர் பாராட்டியிருக்காங்க..
இப்பல்லாம் நான் நடித்த படங்களை பார்த்துவிட்டு நிறைய பிரபலங்கள் என்னை பாராட்டுகிறார்கள். அவ்வப்போது அறிவுரையும் சொல்றாங்க. இன்னும் நல்லா நடிக்கணும் அப்படிங்கிற ஊக்கத்தை ஏற்படுத்துது.

மகள் முன்னாடி ஆடினேன்…
சிங்கம் படத்திற்காக ‘நானே இந்திரன்....' பாடல் ஷூட்டிங் குற்றாலத்தில் நடந்தது. சூர்யாவின் குடும்பம் மொத்தமும் ஷூட்டிங் பார்க்க வந்திருந்தனராம். மகள் முன்னால் முதன் முதலாக நடனம் ஆடியது கூச்சமாக இருந்ததாம் சூர்யாவுக்கு.

நான் அகிலன் இல்லை விமலன்…
சொந்த வாழ்க்கையில் நான் மாற்றான் விமலன் மாதிரிதான். ரொம்ப கூச்சப்படுவேன், ஆனா அந்த அளவுக்கு புத்திசாலி இல்லை. அகிலன் கதாபாத்திரம் ரொம்ப ஜாலியா செய்தேன் என்றார் சூர்யா.

பெர்சனல் வேண்டாமே…
குழந்தை தியாவுக்கு ஏன் காது குத்தலை. குழந்தைக்கு காய்ச்சல்னு ஷூட்டிங் கேன்சல் செய்தீங்களா என்று நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட தொகுப்பாளினி அடிக்கடி பெர்சனல் கேள்விகளையே அதிகம் கேட்டார். இதற்கு நெளிந்த சூர்யா, எங்களுக்கு பிரைவசி இருக்கு அதனால இது மாதிரி கேள்வி வேண்டாமே என்றார்.

நான் 2 நாளா தூங்கலையே…
சூர்யாவை பேட்டி எடுப்பதற்காகவும், அவரைப்பற்றி தகவல்களை சேகரிக்கவேண்டும் என்பதற்காகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளினி இரண்டு நாட்களாக தூங்கலையாம். உங்க முன்னாடி அழகா இருக்கணுமேன்னு மேக் அப் அதிகமா போட்டேன் என்று வேறு வழிந்தார் அந்த தொகுப்பாளினி...அய்யோடா...!


Click it and Unblock the Notifications











