”நான் யாருக்கும் போட்டியில்லை”: லெஜண்ட் அண்ணாச்சியாக மாறி சிவகார்த்திகேயனை கலாய்த்த அமுதவாணன்!

சென்னை: விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு சென்று முன்னணி நடிகராக கலக்கி வருகிறார் சிவகார்த்திகேயன்.

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தான் சிவகார்த்திகேயன் பிரபலமானார்.

தற்போது அதே கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு சிவகார்த்தியேன் நடுவராக சென்றுள்ளார்.

கலக்கப் போவது சிவகார்த்திகேயன்

கலக்கப் போவது சிவகார்த்திகேயன்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் ஏராளம். அவர்களில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குநர் நெல்சன், டான்ஸ் மாஸ்டர் ஷெஃரிப், சாண்டி மாஸ்டர், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரை உதாரணமாகக் கூறலாம். ஆனாலும், காமெடியனாக அறிமுகமாகி, இன்று டாப் ஹீரோவாக அசத்திவரும் சிவகார்த்திகேயன் தொட்ட உச்சம் ரொம்பவே பெரிது.

தொடர்ந்து அசத்தும் KPY

தொடர்ந்து அசத்தும் KPY

விஜய் டிவியில் முகம் காட்டிவிட்டால் சினிமாவில் எளிமையாக அடியெடுத்து வைத்துவிடலாம் என, பலரும் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு வருகின்றனர். அதேபோல், இன்றும் சூப்பர் சிங்கர், KPY, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், 'KPY சீசன்ஸ் 3' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி, வரும் 14ம் தேதி ஒளிபரப்பாகிறது.

இறுதிப் போட்டியில் சிவகார்த்திகேயன்

இறுதிப் போட்டியில் சிவகார்த்திகேயன்

விஜய் தொலைக்காட்சியில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது. இதில் பல காமெடி பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களது திறமையால் மக்களை சிரிக்க வைக்கின்றனர். மேலும், இந்நிகழ்ச்சியில் மதுரை முத்து, அர்ச்சனா, ரோபோ சங்கர் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இந்நிலையில் வரும் 14ம் தேதி ஒளிபரப்பாகும் இறுதிப்போட்டியில் சிவகார்த்திகேயன் சிறப்பு நடுவராக பங்கேற்றுள்ளார்.

வெளியானது அசத்தல் ப்ரோமோ

வெளியானது அசத்தல் ப்ரோமோ

இதனையடுத்து 'KPY சீசன்ஸ் 3' இறுதிப்போட்டிக்கான ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 'ஜலபுல ஜங்' பாடலுக்கு குத்தாட்டம் போட்டபடி என்ட்ரி கொடுக்கும் சிவகார்த்திகேயன், தனக்கு அடையாளம் கொடுத்தது இந்த மேடை தான் என்று உருக்கமாக பேசுகிறார். இதில் அல்டிமேட்டாக லெஜண்ட் அண்ணாச்சி போல அரங்கத்திற்குள் வரும் அமுதவாணன், "நான் யாருக்கும் போட்டியில்ல, நீங்க பயப்படாதீங்க சிவகார்த்திகேயன்" என சொல்ல, அரங்கமே அதிர்கிறது. அதேபோல் இன்னும் சில சுவாரஸ்யங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

'KPY சீசன்ஸ் 3' இறுதிப்போட்டியில் சிவகார்த்திகேயன் சிறப்பு நடுவராக பங்கேற்றுள்ளதால், நிகழ்ச்சி செம்மையாக களைகட்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், சிவகார்த்திகேயன் தனது பழைய நினைவுகளை கண்டிப்பாக பேசியிருப்பார், அதனை பார்க்கலாம் என காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X