twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் மது குடிப்பதில்லை… கல்யாண மாலையில் சொன்ன எஸ்.வி. சேகர்

    By Mayura Akilan
    |

    திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். இன்றைக்கு மேட்ரிமோனியல் மூலம்தான் நிச்சயமாகிறது. அதுவும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாண மாலை என்ற மேட்ரிமோனியல் நிகழ்ச்சி பத்தாண்டுகளுக்கும் மேலாக நேயர்களின் வரவேற்பினை பெற்ற நிகழ்ச்சியாக இருக்கிறது.

    பெண், மாப்பிள்ளைகள் அறிமுகம் செய்வதோடு வாழ்க்கைக்குத் தேவையான, வாழ்வியல் ரீதியான கருத்துக்களைக் கொண்ட விவாத நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இந்த வாரம் தற்செயலாக கல்யாண மாலை நிகழ்ச்சியை பார்க்க நேரிட்ட போது மதுரை முத்து பேசிக்கொண்டிருந்தார். நடுவராக எஸ்.வி. சேகர் அமர்ந்திருக்க, முத்து தொங்கவிட்ட துணுக்குத் தோரணங்களில் சில உங்களுக்காக.

    பரிதாபத்திற்குரிய அவசர வாழ்க்கை….

    பரிதாபத்திற்குரிய அவசர வாழ்க்கை….

    இன்றைய அவசர வாழ்க்கையில் நடைபெறும் சிக்கல்களை நகைச்சுவையாக சொன்னார் மதுரை முத்து. சாப்பிடுவது கூட இன்றைக்கு பாஸ்ட் ஃபுட் வாழ்க்கையாகிவிட்டது. முன்பெல்லாம் களி சாப்பிட்டு விட்டு ஜல்லிக் கட்டு காளையை அணைந்தார்கள். ஆனால் இன்றைக்கு இருப்பவர்கள் பூரி சாப்பிட்டுவிட்டு கோழி பிடிக்கக் கூட திணறுகின்றனர்.

    செல்போன் வாழ்க்கை

    செல்போன் வாழ்க்கை

    பல்லு இல்லாதவனைக்கூட இன்னைக்கு பாத்திரலாம் ஆனா செல் இல்லாதவனை பார்க்க முடியாது. எப்போது பார்த்தாலும் செல்போனில் பேசிக் கொண்டிருப்பவர்கள், யாரும் போன் செய்யாவிட்டால் கூட ஒரு போனில் இருந்து மற்றொரு போனில் பேசி ஆறுதல் பட்டுக் கொள்கிறார்கள். இதனால் கடிதம் எழுதுவதே மறைந்து போனது.

    எஸ்.எம்.எஸ் வாழ்த்து

    எஸ்.எம்.எஸ் வாழ்த்து

    பொங்கல் வாழ்த்து என்றால் முன்பெல்லாம் வாழ்த்து அட்டைகள் அனுப்புவார்கள். போஸ்ட் மேன் கையில் இருந்து அதை வாங்குறப்பவே சந்தோசம் எட்டிப் பார்க்கும். ஆனால் இன்றைக்கு எஸ்.எம்.எஸ்சில் முடித்துக் கொள்கின்றனர். அதுவும் புத்தாண்டு அன்றைக்கு வந்த முதல் வாழ்த்துச் செய்தி ‘ கிரைண்டர்ல அரிசியைப் போட்டா மாவு' வாயில அரிசியைப் போட்டா சாவு' இதைப் பார்த்து படுத்து தூங்கிட்டேன்.

    அடிக்க முடியலையே

    அடிக்க முடியலையே

    இன்றைக்கு ஆசிரியர்கள் யாரும் மாணவர்களை அடிக்க முடியாத அளவிற்கு சட்டம் வந்துவிட்டது. அதை மீறி அடிக்க கையை ஓங்கினால், ஜெயிலுக்கு போக வேண்டியதுதான்.

    தனியார் பள்ளிகள்

    தனியார் பள்ளிகள்

    பள்ளிக்கூடம் நடத்திய அரசாங்கம் இப்போது மதுக்கடைகளை நடத்துகிறது. மதுக்கடைகளை நடத்திய தனியார்கள் இப்போது பள்ளிக்கூடம் நடத்துகின்றனர்.

    படித்தவர் பாடம் நடத்தினால் படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான்.

    மக்கள் கையில் இருக்கிறது

    மக்கள் கையில் இருக்கிறது

    முத்துவின் இந்த வாதத்தைக் கேட்ட நடுவர் எஸ்.வி.சேகர், அரசாங்கமோ, தனியாரோ மதுக்கடைகளை யார் நடத்தினாலும் குடிப்பதும், குடிக்காததும் மக்கள் கையில்தான் இருக்கிறது. 40 வருடம் திரைத்துறை, நாடகத்துறையில் இருந்தாலும் இதுவரை ஒரு சொட்டு மது கூட குடித்தது இல்லை என்றார் எஸ்.வி. சேகர். அதோடு இலவசங்கள் வேண்டாம் என்று கூறினால் அரசாங்கம், மதுக்கடைகளை நடத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றார்.

    1,80,000 திருமணங்கள்

    1,80,000 திருமணங்கள்

    கல்யாண மாலை நிகழ்ச்சியின் மூலம் இதுவரை 1,80000த்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தனர். மேட்ரிமோனியல் பற்றிய நிகழ்ச்சிதான் என்றாலும் சுவாரஸ்யத்திற்கு காரணம் நிகழ்ச்சி நடத்துனர் மோகன். அவரது கனிவான பேச்சு அனைவரையுமே கவர்கிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஞாயிறு காலை நேரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது கல்யாண மாலை

    English summary
    Actor S V Sekhar said in Sun TV's Kalyana maalai that he is not taking liquor.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X