நான் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் இல்லை: நடிகை சங்கீதா
சன்டிவியில் சன் குடும்பம் நிகழ்ச்சியில் ஸ்டிரிக்ட் நடுவராக மார்க் போட்ட நடிகை சங்கீதா. புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சியின் கலகலப்பான தொகுப்பாளினி.
ஜாலியும், கேலியுமாக நடிகர்களை பேட்டி எடுக்கும் சங்கீதா இதுநாள்வரை அவர் மீது இருந்த இமேஜை உடைத்திருக்கிறார். நான் ரொம்ப ஸ்ரிக்ட் ஆபிசர் இல்லை. சிநேகமானவள் என்கிறார்.
நடிகையாக, நடுவராக இருந்த தன்னை நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சி மாற்றிவிட்டது என்கிறார் சங்கீதா.

எனக்கான நிகழ்ச்சி
நான் பந்தா பார்ட்டி இல்லை. ரொம்ப சிநேகமானவ! எல்லார்கிட்டயும் இயல்பா பேசிடுவேன். அதனாலதான் 'நட்சத்திர ஜன்னல்' நிகழ்ச்சி நடத்துற வாய்ப்பு வந்தப்போ, 'இது நமக்கான நிகழ்ச்சி'னு தோணுச்சு. உடனே சம்மதிச்சுட்டேன்!''

மற்றொரு முகம்
திரையில் பார்க்கும் நடிகர், நடிகைகளோட கலகலப்பான இன்னொரு பக்கத்தை காட்டுறதுதான் இந்த நிகழ்ச்சி. ரொம்ப ஜாலியான ஷோ. ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோ... இயல்பில் ரொம்பக் குழந்தைத்தனமா இருப்பது என அவர்களின் மறுபக்கத்தையும் காட்டுவது சுவாரஸ்யமானது.

நேரடி கிசு கிசு
நடிகர், நடிகைகள் பத்தின 'கிசுகிசு'வை... அவங்க கிட்டயே நேரடியா கேட்குறதும், நிகழ்ச்சி யோட ஹைலைட்.

நட்பான நடிகர்கள்
அதர்வா, விக்ரம் பிரபு, விஷால் போன்ற நடிகர்களும், பாலா போன்ற மிகப்பெரிய இயக்குநர்களும் ஜாலியாக தங்களைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தினார்கள்.

எனக்கும் சுவாரஸ்யம்
நானும் சினிமா ஆளுங்கறதால பெரும் பாலும் பல ஸ்டார்களைப் பத்தி எனக்குத் தெரிஞ்சுருக்கறதை எந்தத் தயக்கமும் இல்லாம தைரியமா கேள்வி கேட்க முடியுது. அதேசமயம் எனக்கு தெரியாதவங்கள் வந்தா... அவங்கள பத்தின விஷயங்கள தெரிஞ்சுக்கறதுல எனக்கும் சுவாரஸ்யம்தானே என்கிறார் சங்கீதா.


Click it and Unblock the Notifications











