சீரியலில்தான் நான் வில்லி… தெய்வமகள் ரேகா குமார்
சன் டிவியின் ஒளிபரப்பாகும் தெய்வமகள் தொடரில் கொழுந்தனுடன் சரியாக மல்லுக்கு நிற்கும் அண்ணியாக நடித்து அப்ளாஸ் வாங்குகிறார் வில்லி ரேகா குமார். அசத்தலான புடவை, அதற்கு மேட்ச்சாக அணிகலன்கள் என அவரது வில்லத்தனத்தையும் தாண்டி பளிச்சிடுகிறது.
மாமியார், மாமனார், கணவர், கொழுந்தனார், ஓரகத்தி என வீட்டில் உள்ள அனைவரையும் மிரளவைக்கும் வில்லத்தனத்திற்கு சொந்தக்காரரான ரேகா குமார், சீரியலில் மட்டும்தான் வில்லத்தனம் செய்வாராம்.
சொந்த வாழ்க்கையில் ரொம்ப ஃப்ரண்ட்லியான பெண் என்று கூறும் ரேகா தமிழ் சீரியலில் நடிக்க வந்ததே எதிர்பாரதது என்கிறார்.

நடனத்தில் நம்பர் 1
ரேகா குமார் பெங்களூரை சேர்ந்தவராம். ஸ்கூல் ஆப் டான்ஸில் நம்பர் ஒன் ரேகாதான் என்கிறார். தோழியின் மூலம் சீரியலில் நடிக்க வந்துள்ளார்.

கன்னட சீரியல்
கன்னடத்தில் இதுவரை 40 சீரியல்களில் நடித்துள்ளாராம். மலையாளத்திலும் நான்கு சீரியல்வரை நடித்துள்ள ரேகாவிற்கு தமிழில் தெய்வமகள் 2 வது சீரியலாம்.

சீரியலில்தான் வில்லி
தெய்வமகள் சீரியலில் கொழுந்தனுடன் சரி மல்லுக்கட்டும் அண்ணியாக வில்லத்தனம் செய்தாலும் வீட்டில் அமைதியான, நட்பான பெண்ணாம். நடிப்பிற்கு பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் நட்பு வட்டத்திலும் பாராட்டு குவிகிறதாம்.

உடைக்கு பாராட்டு
சீரியலில் ரேகா அணியும் உடைக்கு பாராட்டு குவியக் காரணம், பார்த்து பார்த்து செலக்ட் செய்து அணிவதினால்தானாம். சீரியலில் அழகழகான புடவையில் அசத்தும் ரேகாவின் ஆல்டைம் பேவரை ஜீன்ஸ் வித் டாப் தான் என்கிறார்.


Click it and Unblock the Notifications











