சிம்ரனின் ரசிகை நான்… ஹிப் டான்ஸ் புகழ் ஆனந்தி
விஜய் டி.வி-யின் 'ஜோடி நம்பர் ஒன்'' டான்ஸர், ஆனந்தியின் ஸ்பெசலே ஹிப் டான்ஸ்தான். இடுப்பை வெட்டி வெட்டி அவர் ஆடும் அழகுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
சிம்ரனின் ரசிகை என்பதால் அடிக்கடி சிம்ரனின் நடனத்தைப் பார்த்து கற்றுக்கொண்டராம். எனவேதான் ஹிப் டான்ஸ் எளிதாக வருகிறது என்கிறார் ஆனந்தி.
விஜய் சார், சிம்ரன் மேடத்தோட ஹிட் டான்ஸ் எல்லாத்தையும் டி.வி.டி-யில காப்பி பண்ணி ஆடிட்டே இருக்கறதுதான் என்னோட ஃபுல் டைம் வேலை. அதனால விஜய்யும், சிம்ரனும்தான் என்னோட சினிமா டைப் டான்ஸ் குரு என்கிறார் ஆனந்தி.

ரசிகையான சிம்ரன்
என்னோட டான்ஸ் ஷோவை பார்த்துட்டு, சிம்ரன் நேர்ல கூப்பிட்டுப் பேசினாங்க. என்னை டான்ஸ் ஆடிக் காட்ட சொல்லிட்டு, 'உன்னோட ஹிப் டான்ஸுக்கு நான் ரசிகை!'னு சொன்னாங்க.

உசுப்பேத்தி உசுப்பேத்தி
''சின்ன வயசுல இருந்தே எல்லாரும், 'நீ அழகா இருக்கே... அழகா எக்ஸ்பிரஷன் கொடுக்குறே... பேசாம நடிக்கப் போலாமே!'னு சொல்லி, சொல்லியே நடிக்கிற ஆசை வந்துடுச்சு.

கனா கானும் காலங்கள்
விஜய் டி.வி-யோட 'கனா காணும் காலங்கள்' ஆடிஷன்ல உடனே செலக்ட் ஆனேன். அப்டியே 'மானாட மயிலாட', 'கார்த்திகை பெண்கள்', அப்புறம் 'ஜோடி நம்பர் ஒன்'னு ஆனந்தியோட பயணம் போயிட்டே இருக்கு.

சினிமா பயணம்
ஆர்யா ஹீரோவா நடிக்கிற 'மீகாமன்' படத்துல ஒரு 'பப்ளி' ரோல் பண்ணிட்டிருக்கேன். சினிமா பயணம் தொடங்கிவிட்டது.

ஸ்லிம் பியூட்டி
''நோ டயட். இஷ்டம்போல சாக்லேட், ஐஸ்க்ரீம் எல்லாமே வெட்டுவேன். டைம் கிடைச்சா ஜிம் போவேன். மத்தபடி டான்ஸ் டான்ஸ் டான்ஸ்தான் என் அழகின் ரகசியம்.


Click it and Unblock the Notifications