சந்தோஷமா இருங்க.. வெளியே ஐ அம் வெயிட்டிங்.. கமல் உடன் இருந்தபோதே லாஸிடம் தில்லாக சொன்ன கவின்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் உடன் இருந்தபோதே தில்லாக லாஸ்லியாவிடம் வெளியே ஐஅம் வெயிட்டிங் என கவின் கூறியது அவரது ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின் கடந்த வியாழக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் சோகத்தில் இருந்தனர்.
நேற்றுதான் அவர்கள் கொஞ்சம் ஃபார்முக்கு வந்தனர். இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் கமலை சந்தித்தார் கவின்.

ஏழரை பத்தாகும்
அப்போது கவின் ஏன் இப்படி செஞ்சிங்க, என்று கமல் கேட்க, தோனுச்சு செய்தேன் என்கிறார் கவின். அதற்கு கமல் கொஞசம் வெயிட் பண்ணியிருந்த ஐந்து, ஏழரை ஆகும், ஏழரை பத்தாகும் என்றார்.

பிளானில் ஒரு பகுதியா?
தொடர்ந்து பேசிய கமல் இதை நீங்கள் பணத்துக்காக செய்யவில்லை என்று தெரிகிறது. இதுவும் உங்கள் பிளானில் ஒரு பகுதியா என கேட்கிறார். இவ்வாறாக முடிகிறது மூன்றாவது புரமோ.

ஐ அம் வெயிட்டிங்
இதனை தொடர்ந்து வெளியான நான்காவது புரமோவில், ஹவுஸ்மேட்ஸ்களுடன் பேசிய கவின், லியா, சந்தோஷமாக இருங்க வேற ஒன்னுமே இல்ல, வெளியே ஐஅம் வெயிட்டிங் என்று தில்லாக கூறுகிறார்.

அதிர்ந்த அரங்கம்
இதனைக்கேட்ட லாஸ்லியா சிரித்தப்படியே ஓகே என்கிறார். அப்போது ஹவுஸ்மேட்ஸ்களும், ம்.. என கிண்டலடிக்க, கமலை திரும்பி பார்த்து பயந்ததுபோல் கும்பிடுகிறார் கவின். அப்போது கமல், என்கிட்ட ஏன் பயப்படுறீங்க? நான் என்ன அப்பாவா என கேட்க அரங்கமே அதிருகிறது.


Click it and Unblock the Notifications











