பிரமாண்டமாய் முடிந்த ஐ திரைப்பட ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி அக்.2ல் டிவியில் ஒளிபரப்பு
பெங்களூர்: பிரமாண்டமாய் நடைபெற்ற ஐ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி வரும் அக்டோபர் 2ம்தேதி ஆயுத பூஜை அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

பிரமாண்ட இயக்குநர் சங்கரின் படைப்பான 'ஐ' ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த திங்கள்கிழமை, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. ஹாலிவுட் ஜாம்பவான் அர்னால்ட், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இரட்டை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், கன்னட முன்ணி நடிகர் புனித் ராஜ்குமார், சங்கர் உட்பட பல விஐபிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 2ம்தேதி ஆயுத பூஜை திருநாளில், ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது. பாடல்களும், டீசரும் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் முக்கியமான நேரத்தை ஒதுக்கி இதை ஒளிபரப்ப ஜெயா டிவி திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











