»   »  எனக்கு ரொமான்ஸ் வரவே வராது..… சொல்கிறார் தெய்வமகள் சத்யா

எனக்கு ரொமான்ஸ் வரவே வராது..… சொல்கிறார் தெய்வமகள் சத்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சீரியலில் அழுகையோ, சண்டையோ கூட எனக்கு ரொம்ப ஈசி... ஆனா ரொமான்ஸ் காட்சியில் நடிப்பது ரொம்ப கஷ்டம் என்று கூறியுள்ளார் தெய்வமகள் தொடரின் கதாநாயகி சத்யா. சன் டிவியின் சூரியவணக்கம் நிகழ்ச்சியின் விருந்தினர் பக்கத்தில் பங்கேற்றுப் பேசிய சத்யா (வாணி போஜன்) கூறியுள்ளார்.

இரவு 8 மணியாகிவிட்டால் போதும் இல்லத்தரசிகள் தெய்வமகள் சீரியல் பார்க்க அமர்ந்து விடுவார்கள். பிரகாஷ் - காயத்ரி இடையேயான சண்டையோ... சத்யாவின் அமைதியான நடிப்போ...ராஜூ கணேசின் கமெடியோ எதுவென்றாலும் அரைமணிநேரம் பார்த்து ரசித்த பின்னர்தான் இரவு சாப்பாடு பக்கமே கவனத்தை திருப்புவார்கள். அந்த அளவிற்கு தெய்வமகள் பீவர் பிடித்தாட்டுகிறது.

சத்யாவிற்கு ரசிகர் மன்றம்

சத்யாவிற்கு ரசிகர் மன்றம்

சின்னத்திரை சீரியல் நாயகி வாணி போஜன் ஆஹா, மாயா சீரியலில் நடித்த கையோடு சன் டிவியின் தெய்வமகள் தொடரில் நடிக்க வந்தார். இப்போது ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு தொடரின் நாயகியும் இவர்தான். ஆனாலும் இவரது சொந்தப் பெயரை விட சத்யா என்ற பெயர்தான் நிலைத்திருக்கிறது.

அமைதியாக மாறினேன்

அமைதியாக மாறினேன்

எனக்கு பயங்கரமாக கோபம் வரும் ஆனால் சத்யா அமைதியானவள். எல்லோரும் சத்யா என்று கூப்பிடுவதால் நான் அமைதியானவளாக மாறிபோனேன். ரசிகர்களுக்கும் இந்த சத்யாவை பிடித்துப்போனது.

காயத்ரியுடன் சண்டை

காயத்ரியுடன் சண்டை

சீரியலில் மட்டும்தான் காயத்ரியுடன் சண்டை போடுவேன்... நிஜத்தில் எல்லோருமே திக் பிரண்ட்ஸ் என்ற சத்யா, இயக்குநர் குமரனுக்கு வார்த்தைக்கு வார்த்தை நன்றி கூறினார்.

பிரகாஷ் நடிப்பு

பிரகாஷ் நடிப்பு

பிரகாஷ் உடன் முதலில் சண்டை போட்டு பின்னர் கல்யாணம் செய்து கொள்ளவேண்டிய சூழ்நிலை வந்து விட்டது. பிரகாஷ் நடிப்பு ரொம்ப பிடிக்கும்.

ரொமான்ஸ் கஷ்டம்பா

ரொமான்ஸ் கஷ்டம்பா

சீரியலில் சண்டை போடுவதோ, அழுவதோ கூட ரொம்ப ஈஸி ஆனால் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதுதான் ரொம்ப கஷ்டம் என்று கூறினார் சத்யா.

கண்ணைப்பார்த்து பேசு

கண்ணைப்பார்த்து பேசு

நடிக்கும் போது பிரகாஷ் கண்ணைப்பார்த்து பேசு என்று டைரக்டர் குமரன் சொல்லுவார் ஆனால் கீழே பார்த்துட்டுதான் நடிப்பேன்... அப்புறம் டைரக்டர் சொல்லிக்கொடுப்பார். பிரகாஷ் ரொம்ப ஹெல்ப் பண்ணுவார்.

பார்த்தா தெரியலையே

பார்த்தா தெரியலையே

தெய்வமகள் சீரியலில் சத்யா - பிரகாஷ் ரொமான்ஸ் காட்சிகள் ரொம்ப இயல்பாக அமைந்திருக்கும். நிறைய ரசிகர்களுக்கு இவர்களின் ரொமான்ஸ் பிடிக்கும். படத்தை பாருங்க ரசிகர்களே சத்யா கஷ்டப்பட்டு நடிச்ச மாதிரியா தெரியுது?

English summary
Deivamagal heroine Vaani Bhojan has said that she cannot do romantic roles

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil